Breaking News: துபாயில் 6 வயது சிறுமி அசத்தல் சாதனை: இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் ஏதாவது ஒரு விஷயத்தில் சாதனை படைக்க வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது 6 வயது சிறுமி ஒரு சாதனையை படைத்துள்ளார்.
துபாயில் 6 வயது சிறுமி அசத்தல் சாதனை
அதாவது துபாயில் ராமநாதபுரத்தை சேர்ந்த ரிதமிகா என்ற சிறுமி தனது பெற்றோர்களுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். இப்படி இருக்கும் சூழ்நிலையில் ரிதமிகா சிறுமி 1ம் வாய்ப்பாட்டில் தொடங்கி 10ம் வாய்ப்பாடு வரை எழுதியுள்ளார்.
அதுமட்டுமின்றி அவர் எழுதும் போது கிட்டத்தட்ட தமிழர்களுக்கு சொந்தமான 100 திருக்குறளையும் கூறியுள்ளார். அதுவும் வெறும் 9 நிமிடங்களில். இதை தான் ரிதமிகா சிறுமி சாதனையாக செய்துள்ளார். மேலும் அந்த சிறுமியின் சாதனை கலாம் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
Also Read: கும்பகோணம் தனியார் பள்ளியில் AI ஆசிரியர் ‘வித்யா’ அறிமுகம் – பெரும் எதிர்பார்ப்பில் மாணவர்கள்!!
இதனை தொடர்ந்து அந்த சிறுமிக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதே போல் ஸ்ரீ சம்யுத்தா என்ற 6 வயது சிறுமி யோகா செய்து சாதனை படைத்து நோபல் புத்தகத்தில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் புதிதாக 7 ஆயிரம் பஸ் வாங்க முடிவு
சிவகாசியில் காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை
தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (26.07.2024)
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்