வெளியெல்லாம் போக முடியாது.., குணசேகரனை கட்டன் ரைட் வாங்கிய ஆதிரை., விறுவிறுப்பாக போகும் எதிர்நீச்சல் ப்ரோமோ!!!வெளியெல்லாம் போக முடியாது.., குணசேகரனை கட்டன் ரைட் வாங்கிய ஆதிரை., விறுவிறுப்பாக போகும் எதிர்நீச்சல் ப்ரோமோ!!!

சன் டிவியின் முக்கிய சீரியலான “எதிர் நீச்சல்” தற்போது பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. குணசேகரனின் மகளை ரவுடிகள் கடத்திய நிலையில் மருமகள்கள் வீட்டை விட்டு வெளியேறி தர்ஷினியை தேடத் தொடங்கிய நிலையில், ஒருவழியாக ஜனனி, ஈஸ்வரி ஆகியோர் தர்ஷினி இருக்கும் இடத்தை கண்டு பிடிக்கின்றனர். அதே நேரத்தில் தர்ஷினி ரவுடிகளிடம் சண்டை போட்டு தப்பிச்சு செல்கிறார்.

இந்நிலையில் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் குணசேகரனை பார்த்து ஆதிரை உங்களுக்கு மகள் காணாமல் போனதை நினைத்து கவலையே இல்லை என்று சண்டை போடுகிறார். ஆனால் நீ இந்த விஷயத்தை பயன்படுத்தி அண்ணியை அசிங்கப்படுத்த பார்க்கிறாய். அது ஒருபோதும் நடக்காது, இரு ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம், ஜீவானந்தத்தை கைது செய்ய காவல்துறை செல்கிறது .

இதையடுத்து விசாலாட்சியிடம் இனி எனக்கு எந்த உறவும் கிடையாது, அத்து விட்டுட்டேன் என்று குணசேகரன் கூறுகிறார். இதனை தொடர்ந்து எல்லாரும் வீட்டை விட்டு வெளியே போங்க என்று கூற, நாங்க  எதுக்கு போகணும் இங்க தான் இருப்போம் என்று சக்தி கூற,  குணசேகரன் அதிர்ச்சி அடையும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது. 

மொய்தின் பாய் ஆட்டமே இனிமே தான் இருக்கு.., “லால் சலாம்” ட்ரைலர் ரிலீஸ்.., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *