பிரபல பாடகி அல்கா யாக்னிக்கு திடீரென ஏற்பட்ட செவித்திறன் குறைபாடு – அவரே பதிவிட்ட ஷாக்கிங் பதிவு!!!

திரையுலகில் பிரபல பாடகி அல்கா யாக்னிக்கு திடீரென ஏற்பட்ட செவித்திறன் குறைபாடு தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் பாடகி அல்கா யாக்னிக். இவர் ஹிந்தியில் ஏ ஆர் ரகுமான் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார். தமிழில் ஓரம் போ படத்தில் இடம்பெற்ற “இது என்ன மாயம்” பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல பாடகி அல்கா யாக்னிக்கு திடீரென ஏற்பட்ட செவித்திறன் குறைபாடு

இந்நிலையில் பாடகி அல்கா யாக்னிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஷாக்கிங் பதிவை பதிவிட்டுள்ளார். அதாவது, பிரபல பின்னணி பாடகி அல்காவுக்கு “sensorineural Hearing Loss” என்படும் செவித்திறன் குறைபாடு குறைபாடு இருப்பதாக கூறியுள்ளார். மேலும் அதிக சத்தத்துடன் இசையை கேட்பதால் தான் இந்த குறைபாடு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். எனவே மக்கள் யாவரும் அதிக ஒலியுடன் இசையை கேட்க வேண்டாம் என்றும், அதிகமாக Headphone பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார். அவரின் பதிவை பார்த்த ரசிகர்கள் சற்று சோகத்தில் இருந்து வருகின்றனர். 

Leave a Comment