பாலியல் வன்கொடுமையை தடுக்க புதிய கருவி கண்டுபிடிப்பு  - அதிமுக ஐடி பிரிவு வெளியிட்ட முக்கிய பதிவு!!பாலியல் வன்கொடுமையை தடுக்க புதிய கருவி கண்டுபிடிப்பு  - அதிமுக ஐடி பிரிவு வெளியிட்ட முக்கிய பதிவு!!

ADMK IT Division 2024 – பாலியல் வன்கொடுமையை தடுக்க புதிய கருவி கண்டுபிடிப்பு: இன்றைய காலகட்டத்தில் கொலை கொள்ளை பாலியல் வன்கொடுமை என தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. இதற்கு கடுமையான தண்டனைகள் கொண்டு வந்த போதிலும் குற்றங்கள் தீர்ந்த பாடில்லை. குறிப்பாக சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை பாலியல் சீண்டலால் பாதிக்கப்பட்டு வருகிறார். மேலும் தமிழகத்தில் தான் பாலியல் குற்றங்கள் அதிகம் நடப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பாலியல் வன்கொடுமையை தடுக்கும் விதமாக ஒரு புதிய கருவியை அதிமுக கட்சி கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அதிமுக ஐடி பிரிவு மண்டல செயலாளர் கோவை சத்யன் வெளியிட்டுள்ள பதிவில், பாஜக ஆளும் பெரும்பாலான மாநிலங்களில் பாலியல் வன்கொடுமை அதிகமாக இருந்து வருகிறது. எனவே பாலியல் வன்கொடுமை தடுப்பதற்கான கருவி ஒன்றை காப்புரிமை பெற்று உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த கருவி மூலம் பாலியல் தொடர்பான குற்றங்கள் தடுக்கப்படும் என்றும் இது குறித்து மத்திய அரசின் ஒப்புதலை எதிர்பார்த்து காத்து கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். admk party – eps – tamilnadu party – tamilnadu news பாலியல் வன்கொடுமையை தடுக்க புதிய கருவி கண்டுபிடிப்பு

Kannada Actor Darshan arrest: காதலிக்காக கூலிப்படையை ஏவி கொலையா? பிரபல திரைப்பட நடிகர் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *