விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் 2024  - திமுக வேட்பாளரை அறிவித்த முதல்வர் முக ஸ்டாலின்!!விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் 2024  - திமுக வேட்பாளரை அறிவித்த முதல்வர் முக ஸ்டாலின்!!

vikravandi by election விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் 2024: தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் நடைபெற வில்லை. உறுப்பினர் புகழேந்தி மரணமடைந்ததை அடுத்து தொடர்ந்து தேர்தல் நடைபெறாமல் இருந்த அந்த தொகுதியில் வருகிற ஜூலை மாதம் 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் இடைத்தேர்தலில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்கள் வருகிற ஜூன் 14ம் தேதி தொடங்கி ஜூன் 21ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் 2024

இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட இருக்கும் வேட்பாளர் குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி திமுக கட்சி சார்பாக வேட்பாளராக அன்னியூர் சிவாவை நிற்க வைக்க முக ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார். அன்னியூர் சிவா விவசாய தொழிலாளர் அணிச் செயலாளர் பொறுப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூலை 13 நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் முன்னரே தெரிவித்தது. lok sabha election 2024 – parliamentary election – by election news – dmk party – cm stalin – tamilnadu cm stalin

பாலியல் வன்கொடுமையை தடுக்க புதிய கருவி கண்டுபிடிப்பு  – அதிமுக ஐடி பிரிவு வெளியிட்ட முக்கிய பதிவு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *