இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தேர்வு ! விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் !இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தேர்வு ! விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் !

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தேர்வு. தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்து வருகிறார். மேலும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வரும் டி20 உலகக்கோப்பை போட்டியுடன் முடிவடைய உள்ள நிலையில் இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளரை தேர்தெடுக்கும் பணியில் பிசிசிஐ இறங்கியுள்ளது.

பிசிசிஐ சார்பில் இந்திய கிரிக்கெட் அணிக்கான தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. தலைமை பயிற்ச்சியாளர் போட்டியில் விவிஎஸ் லக்ஷ்மண் மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோர் இந்திய போட்டியாளர்களில் முக்கியமானவர்களாக இடம் பெற்றிருந்தனர். மேலும் ரிக்கி பாண்டிங், ஜஸ்டின் லாங்கர், ஸ்டீபன் பிளெமிங் உள்ளிட்டோரும் பரிசீலனையில் இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

பழனி முருகன் கோவிலில் மே 30 ஆம் தேதி ரோப் கார் வசதி ரத்து – கோவில் நிர்வாகம் அறிவிப்பு !

கடந்த சில நாட்களுக்கு முன் தேர்வு உத்தரவாதம் கொடுத்தால் மட்டுமே தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பேன் என்று கவுதம் கம்பீர் தெரிவித்தார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்படுவது உறுதியாகியுள்ளது. மேலும் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *