அப்படி போடு..,, இனி அதிரடி சரவெடி தான்.., ரீ ரிலீஸாகும் தளபதி விஜய்யின் கில்லி திரைப்படம்.., எப்பன்னு தெரியுமா?அப்படி போடு..,, இனி அதிரடி சரவெடி தான்.., ரீ ரிலீஸாகும் தளபதி விஜய்யின் கில்லி திரைப்படம்.., எப்பன்னு தெரியுமா?

தளபதி விஜய் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான கில்லி படத்தின் ரீ ரிலீஸ் தேதி குறித்து தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாக பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை 3, வாரணம் ஆயிரம், ஆயிரத்தில் ஒருவன், வேட்டையாடு விளையாடு, மயக்கம் என்ன, வேலையில்லா பட்டதாரி மற்றும் திருமலை உள்ளிட்ட படங்கள் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வசூல் ஈட்டியது. அந்த வகையில் திருமலை படத்தை தொடர்ந்து தற்போது தளபதி விஜய்யின் மீண்டும்  பிளாக் பஸ்டர் ஹிட் படமான கில்லி ரீ ரிலீஸ் செய்யப்பட இருப்பதாகவும், அதற்கான பணிகளில் படக்குழு இருந்து வருவதாகவும் தொடர்ந்து தகவல் வெளியாகி வந்தது.

இந்நிலையில் கில்லி திரைப்படம் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது விஜய்யின் கில்லி படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது தேதியை மாற்றி படம் ஏப்ரல் 20ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 20 வருடங்களுக்கு பிறகு இப்படம் மீண்டும் ஒளிபரப்பாக இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார்கள். மேலும் விஜய் தளபதி 69 படத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி அரசியலில் களமிறங்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

லால் சலாம் படத்தை  ஓடிடியில் வெளியிட முடியாது?.., அது கிடைத்தால் மட்டுமே ரிலீஸ்?.., படக்குழுவுக்கு செக் வைத்த நிறுவனம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *