SSY Scheme: செல்வ மகள் சேமிப்பு திட்டம்: இன்றைய காலகட்டத்தில் பெண்கள் எல்லா துறைகளிலும் சாதனை புரிந்து வருகின்றனர். எனவே அவர்களை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு மற்றும் மாநில அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகைகளில் பெண் குழந்தைகளுக்காக மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் தான் செல்வ மகள் சேமிப்பு திட்டம்.
செல்வ மகள் சேமிப்பு திட்டம்
அதாவது சுகன்யா சம்ரிதி யோஜனா எனும் இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கான தொடங்கப்பட்ட திட்டமாகும். இத்திட்டம் கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மேலும் இந்த திட்டத்தின் வாயிலாக பெண்களின் கல்விக்கு அல்லது திருமணத்திற்கு உதவும் தருவாயில் மத்திய அரசு தொடங்கியுள்ளது. ஒரு பெண் குழந்தை பிறந்தது முதல் அக்குழந்தைக்கு 10 வயது ஆவதற்குள் கணக்கை ஓபன் செய்ய வேண்டும்.
குறிப்பாக அக்குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மட்டுமே கணக்கை ஓபன் செய்ய முடியும். அதன்படி பெற்றோர் அல்லது பாதுகாவலர் ரூ 1000 வைப்பு தொகையாக வைத்து கொண்டு சுகன்யா சம்ரிதி கணக்கை தபால் நிலையத்திலோஅல்லது RBI அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளிலோ தொடங்கி கொள்ளலாம். மேலும் இந்த திட்டம் 21 ஆண்டுகள் வரை செயல்படும்.
கணக்கை தொடர்வது எப்படி?
உங்கள் குழந்தைக்கு 10 வயது நிரம்பாமல் இருந்தால் அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று வெறும் 1000 ரூபாய் கட்டி கணக்கை தொடங்கலாம்.
இதற்கு குழந்தையின் Birth certificate அவசியம்.
மேலும் பெற்றோரின் ஆதார் கார்டு அவசியம். மாதந்தோறும் 1ம் தேதி அன்று ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்த வேண்டும்.
ஆரம்பித்த நாளில் இருந்து அடுத்த 21 ஆண்டுகள் பணம் செலுத்த வேண்டும்.
எடுத்துக்காட்டாக, உங்கள் குழந்தைக்கு 9வது வயதில் கணக்கை ஓபன் செய்தீர்கள் என்றால் அக்குழந்தைக்கு 30 வயது போது தான் கணக்கு நிறைவு பெறும்.
கணக்கை குழந்தைகள் எப்போது நிர்வகிக்க முடியும்?
SSY கணக்கை தொடங்கிய குழந்தைக்கு 18 வயது நிரப்பும் வரை அக்குழந்தையின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் நிர்வகித்து கொள்ளலாம்.
அப்புறம் கணக்கை சம்பந்தப்பட்ட குழந்தைகளே நிர்வகித்து கொள்ளலாம்.
அதுமட்டுமின்றி கணக்கை தொடங்கிய பெண்ணின் கல்வி செலவுக்காக 50 சதவீதம் எடுத்துக் கொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டத்தின் மூலம் கடன் வாங்க முடியாது.
கணக்கை முன்கூட்டியே முடிப்பது எப்படி?
SSY கணக்கை தொடங்கிய பெண் குழந்தைக்கு 21 ஆண்டுகள் கணக்கை தொடர வேண்டாம் பாதியில் எடுக்க வேண்டும் என்று எண்ணினால்,
கணக்கு வைத்திருப்பவர் திருமணத்தின் காரணமாக முடிக்க வேண்டும் என்று கோரிக்கையுடன் விண்ணப்பித்தால் அனுமதிக்கப்படும்.
அதுவும் திருமணம் முடிந்த நாளில் இருந்து அடுத்த ஒரு மாதத்திலோ அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பே கணக்கை முடிக்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் கணக்கு தொடரப்படும்.
Also Read: மாடி வீடு கட்டுனா தெய்வ குற்றம் – நூதனமான பாரம்பரியத்தை பின்பற்றும் கிராமம் – அதுவும் தமிழ்நாட்டுலயா?
வரிவிலக்கு?
சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் கணக்கு கீழ் டெபாசிட் செய்யப்படும் எந்த ஒரு தொகைக்கும், ஐடி சட்டம், 1961ன் 80 சி யின் கீழ் படி அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படும்.
இந்த டிப்ஸையும் நல்லா தெரிஞ்சுக்கோங்க?
மாடி வீடு கட்டுனா தெய்வ குற்றம்
டீ குடித்தால் தலைவலி நீங்குமா?
விஸ்கி பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்
முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா