25 ஆண்டுகளை நிறைவு செய்த google25 ஆண்டுகளை நிறைவு செய்த google

   25 ஆண்டுகளை நிறைவு செய்த google. தற்போது இருக்கும் மனிதர்கள் அனைவருக்கும் ஏழாம் அறிவாக கூகுள் தான் இருக்கின்றது. கூகுளில் இல்லாத தகவல்களே இல்லை என்று இருக்கும் நிலையில் கூகுள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

25 ஆண்டுகளை நிறைவு செய்த google ! அதன் ஓனர் யார் தெரியுமா ? வாங்க தெரிஞ்சுக்கலாம் 

25 ஆண்டுகளை நிறைவு செய்த google

ஓனர் யார் தெரியுமா ?

   கூகுள் என்ற செயலியை கண்டு பிடித்தவர்கள் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆவர். லாரி பேஜ் அமெரிக்கா மெக்சிகன் நகரில் 1973ல் பிறந்தவர். இவரின் தந்தை மற்றும் தாய் இருவரும் மெக்சிகன் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறை பேராசிரியராக இருந்தவர்கள். இருவரும் கணினி அறிவியல் சார்ந்த துறையில் இருந்ததால் இவருக்கும் கணினி மீது அதிகளவில் ஆர்வம் இருந்தது. இவரின் வீடு முழுவதும் தொழில் நுட்பம் சார்ந்த புத்தகங்கள் , கணினி என இருக்கும் சூழலில் வளர்ந்தவர். பள்ளியில் படிக்கும் போது தன் 6வயதில் வீட்டுப்பாடங்களை ‘ Word Processing ‘ல் செய்தவர். தான் 12ம் வயதில் அறிவியல் துறையில் பல அற்புதங்கள் செய்த நிக்கோலா டெஸ்லாவின் வாழ்க்கை வரலாற்றை படித்தார். உலகிற்கு உதவும் பல கண்டுபிடிப்புகள் இவர் கண்டறிந்தாலும் சந்தைப்படுத்த ( Marketing ) முடியாமல் தன் 86ம் வயதில் கடனாளியாக இறந்தார். கண்டுபிடிப்புகள் மட்டும் வெற்றி அல்ல. அவைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் போது தான் வெற்றி பெற முடியும் என்ற தத்துவத்தினை லாரி பேஜ் வாழ்வில் உணர்ந்து கொண்டார். 

இணையதளம் உருவாக்கம் :

   1990களில் தான் இணையதளம் பிரபலமடைந்தது. தினமும் புதுப்புது இணையதளங்கள் வந்து கொண்டே இருந்தது. இவர்களில் டெம் பெர்னாசேல்லி தான் https , html போன்றவைகளை உலகிற்கு அறிமுகம் செய்தவர். ஆரம்ப காலங்களில் நமக்கு வேண்டிய தகவல்களை நாமே பெற்றுக்கொள்ளும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டது. ஆனால் அந்த தகவல்களை எப்படி அறிவது என்ற கேள்வி எழுந்தது. இதன் மூலமே இணையதளம் அடுத்த கட்டத்திற்கு சென்றது. இந்நிலையில் முழு விவரங்களை altavista என்ற செயலி வழங்கியது. 

Google உருவாக்கம் :

   இணையதளம் வளர்ச்சி அடைந்து வரும் காலத்தில் தான் லாரி பேஜ் Stanford பல்கலைக்கழகத்தில் ஆய்வு படிப்பிற்க்காக சேர்ந்தார்.  அங்கு கணினி ஆய்வில் படிப்பில் இருந்தவர் தான் ரஷ்யாவை சேர்ந்த செர்ஜி பிரின். ஆரம்பத்தில் இருவரும் சண்டையிட்டுக்கொண்டே இருந்தனர். கல்லூரியில் இவருக்கு ஆய்விற்கு என்று கொடுக்கப்பட்ட தலைப்பு ” The Anatomy of a Large – Scale Hypertextual Web Search Engine “. இந்த தலைப்பில் coding தயாரித்தார் லாரி. இந்த ஆய்விற்கு லாரிக்கு செர்ஜி உதவினார். இணையதளத்தில் நாம் தேடும் தகவல் ஒன்றாக இருக்கும் ஆனால் பதில் வேறு ஒன்றாக இருக்கும். இருவரின் கடுமையான உழைத்து தேடுகுறி ஒன்றை உருவாக்கினார்கள். அதன் பெயரே நாம் தற்போது பயன்படுத்தும் ‘ GOOGLE ‘ . 

பெங்களூருவில் முழு அடைப்பு ! இந்திய கிரிக்கெட் வீரர் கே.எஸ்.ராகுல் ஆதரவு !

பெயர் காரணம் :

   இணையதளத்தின் மூலம் நாம் தகவல்களை தேடுவதர்க்கு பயன்படுத்தப்படும் கூகுள் என்பது ஒரு நம்பரை குறிக்கும் பெயர். அதாவது ஒன்று ( 1 )க்கு பக்கத்தில் 100பூஜ்ஜியம் சேர்ப்பதால் வரும் எண்ணை குறிக்கும் பெயர் “ கூகுள் “ ( Google ) என்பதாகும். 

Google விற்பனை :

   லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் இருவரும் கூகுளை ஆரம்பத்தில் யாரிடமாவது விற்று விடலாம் என்று எண்ணினார். இதனால் 1998ல் இணையதளத்தில் கொடி கட்டிப்பறந்த Yahoo நிறுவனத்திடம் 1பில்லியன் டாலருக்கு விலை பேசினர் லாரி மற்றும் பிரின். ஆனால் Yahoo நிறுவனம் வாங்க மறுத்து விட்டது. அதன் பின்னர் Yahoo நிறுவனமே 3பில்லியனுக்கு வாங்குகின்றேன் என்று 2003ல் விலை பேசும் போது லாரி மற்றும் பிரின் மறுத்து விட்டனர். அதன் பின்னரே ‘ நாமே ஒரு நிறுவனம் தொடங்கினால் என்ன ‘ என்று சிந்தித்தனர்.

நிறுவனம் தொடக்கம் :

   லாரி மற்றும் பிரின் இருவரும் நடுத்தர குடும்பத்தினர். எனவே PIZZA விற்று கிடைத்த பணத்தினை வைத்துக்கொண்டு குறைந்த விலையில் கணினி வாங்கினர். இருவரும் தங்கி இருக்கும் ஹாஸ்டல் அறையில் வைத்தே முதன் முதலில் Google நிறுவனம் 1998 செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. 

எங்கள் முகநூல் பக்கத்தில் இணைந்திட இங்கே கிளிக் செய்யவும்

Google வளர்ச்சி :

   பின்னர் லாரியின் தந்தை நண்பர் சூசன் அவர்களின் வீட்டு கார் நிறுத்தும் இடத்தில் 6பணியாளர்களுடன் நிறுவனம் மாற்றப்பட்டது. நிறுவனம் ஆரம்பித்த நாட்களிலே ஒரு நாளில் மட்டும் 10ஆயிரம் தேடல்கள் இருந்தது. 1999ல் நிறுவனம் சிலிக்கன் பள்ளத்தாக்கு பகுதிக்கு மற்றம் செய்யப்பட்டது. நிறுவனம் தொடங்கப்பட்ட ஒரு ஆண்டிலேயே 3.5மில்லியன் தேடல்களுக்கு கூகுள் நிறுவனம் பதில் அளித்து இருந்தது. கூகுள் நிறுவனத்தில் வருவாய் இட்டும் நோக்கத்துடன் 2000ம் ஆண்டில் இருந்து விளம்பரங்கள் தேடலுடன் சேர்க்கப்பட்டது.  வருவாய் மற்றும் வளர்ச்சி என இரண்டும் இருந்ததால் 2003ம் ஆண்டு நிறுவனம் இயங்கி வந்த கட்டிடம் Googleபிளக்ஸ் என்ற பெயரில் தற்போது வரையில் வழங்கப்பட்டு வருகின்றது. 319மில்லியனுக்கு அந்த கட்டிட தொகுதியை சொந்தமாக வாங்கியது கூகுள் நிறுவனம். 2004ம் ஆண்டு கூகுள் நிறுவனம் பங்குசந்தையில் கால் பதித்தது. அதன் பின்னரே Google Book , Google Image போன்றவைகள் உருவாக்கப்பட்டது. 2006ம் ஆண்டு Youtube செயலியை கூகுள் நிறுவனம் 1.65 பில்லியன் கொடுத்து வாங்கியது.  அதன் பின்னரே GMail , Map , Drive போன்ற 25க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை கூகுள் நிறுவனம் வழங்கி உள்ளது. 

கூகுள் நிறுவனத்தின் பணியாளர்கள் நிலைமை :

   கூகுள் நிறுவனத்தில் லட்சக்கணக்கான பேர்கள் நேரடியாக பணி செய்து வருகின்றனர். தகுதியான பணியாளர்களை நியமிக்க வேண்டும். மேலும் பணியாளர்களுக்கு உரிய வசதிகள் அனைத்தையும் செய்து கொடுக்க வேண்டும் என்பதே லாரியின் சிந்தனை. எனவே கூகுள் நிறுவனத்தில் பணியாளர்கள் தங்களின் ஓய்வு நேரத்தில் ,

  1. விளையாடலாம் 

  2. பாடல் கேட்கலாம் 

  3. மசாஜ் செய்து கொள்ளலாம் 

  4. நீச்சல் பயிற்சி செய்யலாம் 

  5. முடி வெட்ட சலூன் பயன்படுத்தலாம் 

  6. வாஷிங் மெஷின் பயன்படுத்திக் கொள்ளலாம்

  7. தங்களின் செல்ல பிராணிகளை அலுவலகத்திற்கு கொண்டு வரலாம்

  8. கூகுள் நிறுவன பணியாளர்கள் இறந்து விட்டால் அவர்களின் துணைக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஊதியத்தில் 50% ஆண்டிற்கு ஒரு முறை வழங்கப்படும்.

  9. சுற்றுலா 

10. வார இறுதி கொண்டாட்டம் 

11. நிறுவனத்தில் வாங்கும் பொருட்களுக்கு சலுகைகள் என்று தங்களின் பணியாளர்களுக்கு செய்து கொடுக்கப்படுகின்றது. 

சந்தித்த தோல்விகள் :

   கூகுள் நிறுவனத்தின் பல தயரிப்புகளை பில்லியன் மக்கள் பயன்படுத்தி வந்தாலும் 90க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் தோல்வியை சந்தித்துள்ளது. ORKUT , Google DUO , Google Wave , Google Answer போன்றவைகள் கூகுள் நிறுவனம் தயாரித்ததன் தோல்வி  செயலிகள் ஆகும். 

கூகுள் பயன்கள் :

   மக்கள் கடவுளை நம்புகின்றார்களே இல்லையோ கூகுளை நம்புகின்றார்கள். நமக்கு தெரிந்த மற்றும் தெரியாத என்ன சந்தேகங்களை கூகுளிடம் கேட்டாலும் கூகுள் அதற்க்கு பதில் அளிக்கும்.  உதாரணமாக சமையல் , மருத்துவக்குறிப்பு , கல்வி என அனைத்து தகவல்களையும் கூகுள் அளிக்கும்.

25 ஆண்டுகளை நிறைவு செய்த google

காலையில் எழுந்து நாம் மணி பார்ப்பதில் தொடக்கி செய்திகள் , வானிலை நிலவரம் , போக்குவரத்து நெரிசல் என அனைத்திற்கும் கூகுளை சார்ந்து நாம் வாழ்ந்து வருகின்றோம். ஒரு மனிதனுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் கூகுள் கொண்டுள்ளது. இதுவே நிறுவனம் 25ஆண்டுகள் வரையில் முதன்மை இடத்தில் இருப்பதற்கு காரணம் ஆகும். உலகம் கையில் நாம் என்பது மாறி உலகம் நம் கையில் என்னும் சூழ்நிலையில் வந்துவிட்டோம். கூகுளில் பல நன்மைகள் இருந்தாலும் அளவோடு பயன்படுத்தும் போது தான் நமக்கு நல்லது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *