அனுமன் ஜெயந்தி 2024அனுமன் ஜெயந்தி 2024

அனுமன் ஜெயந்தி 2024. இந்த ஆண்டு இரண்டு முறை வரும் ஒரே விழாவாக உள்ளது. வீரம், தீரம், பராக்கிரமம் பொருந்தியவன் அனுமன். நினைத்த காரியத்தை நிறைவேற்றிட இந்த மார்கழியில் அனுமனை எப்படி வழிபடுவது, அதன் பலன்கள் போன்ற சுவாரஸ்ய தகவல்கள் இந்த பதிவில் பார்க்கலாம்.

JOIN WHATSAPP CHANNEL

மங்களம் நிறைந்த இந்த மார்கழி மாதத்தில் கடவுள்களும், தேவர்களும் மிகுந்த சந்தோஷத்தில் இருப்பார்கள் என்று நம் மூத்தோர் கூறுவார். அதனால் தான் சகல ஐஸ்வர்யங்களையும் பெற மக்கள் அனைவரும் இந்த மார்கழி மாதத்தில் கடவுள் வழிபாடு செய்ய வேண்டும். மற்ற மாதங்களை விட இந்த மார்கழி மாத வழிபாடு நமக்கு இரு மடங்கு சந்தோசத்தை தரும்.

அற்புதங்கள் நிறைந்த இந்த மார்கழியில் தான் நம் ஆஞ்சநேயர் பிறந்தார். இந்த ஆண்டில் இரண்டு முறை வருவது தனி சிறப்பு.

  1. ஜனவரி 11 வியாழன் கிழமை அமாவாசை திதியில் வருகிறது.
  2. டிசம்பர் 30 திங்கள் கிழமை அமாவாசை திதியில் வருகிறது.
  1. ராமாயண காவியத்தின் ஆணிவேர் நம் ஆஞ்சநேயர் தான்.
  2. சொல்லின் செல்வர் என்று ராமா பிரானால் புகழ பட்டவர்.
  3. ஆதித்ய பகவானிடம் கல்வி கற்றவர்.
  4. சிறந்த பக்தன் அல்லது சிறந்த விசுவாசி
  5. பராக்கிரமம் பொருந்தியவன்.
  6. சீதா பிராட்டியிடம் நித்ய சிரஞ்சீவி பட்டம் பெற்றவன்.

சபரி மலையில் முன்பதிவு திடீர் நிறுத்தம் ! ஸ்பாட் பதிவும் விரைவில் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு !

அனுமன் ஜெயந்தி நாளில் காலை வழிபாடு செய்வது நல்ல பலனை தரும். அன்று கோவிலுக்கு சென்று அனுமனுக்கு வெற்றிலை மாலை, துளசி மாலை, வடமலை, வெண்ணை ஆகியற்றை அனுமனுக்கு சாற்றி வழிபாடு செய்யலாம். கோவிலுக்கு செல்ல இயலாதவர்கள் வீட்டிலும் அனுமன் படம் அல்லது விக்ரகம் வைத்து வழிபாடு செய்யலாம். அனுமனின் வால் வழிபாடு மிக சிறப்பு வாய்ந்ததாகும். அன்று அனுமன் வாலில் பொட்டு வைத்து கும்பிடவேண்டும்.

  1. குழந்தைகளுக்கு கல்வி செல்வம் கிடைக்கும்.
  2. ராமர், சீதை ஒன்று சேர அனுமன் காரணமாக இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே உள்ள
    பிரச்சனைகள் நீங்கி அவர்கள் ஒன்று பட்டு வாழ்வார்கள்.

3.ராகு, கேது, சனி போன்ற கிரகங்களின் தாக்குதல் நீங்கும்.

4.நீண்ட ஆயுள், நிலைத்த புகழ் கிடைக்கும்.

  1. தீராத நோய்களையும் தீர்த்து நிவாரணம் வழங்குவர்.

6.அழகான புத்தி கூர்மையுள்ள குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

அனுமன் ஜெயந்தி 2024

வெற்றிலை மாலை – நினைத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும்.

துளசி மாலை – சந்தான பாக்கியம் கிடைக்கும்.

வடமலை – நவகிரஹ தோஷ நிவர்த்தி அடையும்.

வெண்ணை – நமது கஷ்டங்கள் வெண்ணை போல் உருகிடும்.

இவ்வளவு அற்புதங்கள் தரும் நல்ல நாளில் நாம் அனைவரும் ஆஞ்சநேயரை வழிபட்டு சகல நன்மைகளையும் பெற வேண்டும்.

By Revathy