பாத்ரூமில் ரகசிய கேமரா., பெண்ணை அணுஅணுவாய் ரசித்த வீட்டு ஓனர்.., அதிரடியாக கைது செய்த காவல்துறை!!

இன்றைய சமுதாயத்தில் பாலியல், கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களுக்கு அரசு பல கடும் நடவடிக்கை எடுத்து வந்த போதிலும், தொடர்ந்து இது மாதிரியான குற்றங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. தற்போது சென்னையில் ஒரு மருத்துவ மாணவன் செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த இப்ராஹிம்(36) என்ற நபர் முதுநிலை மருத்துவம் படித்து வருகிறார்.

இவரது வீட்டிற்கு கொஞ்ச நாட்களுக்கு முன்னர் திருமணம் முடிந்த தம்பதி குடிபெயர்ந்து வந்துள்ளனர். இருவரும் வேலைக்கு சென்ற நிலையில், இன்னொரு சாவியை பயன்படுத்தி, அந்த தம்பதி வீட்டுக்குள் சென்று பாத்ரூமுக்குள் ரகசிய பேனா கேமராவை வைத்து விட்டு வந்துள்ளார். இதை எதர்ச்சியாக பார்த்த அந்த பெண் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அந்த தம்பதி காவல் நிலையத்திற்கு சென்று இது குறித்து புகார் கொடுத்தனர். எனவே இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் வீட்டு ஓனர்  இப்ராஹிம் தான் இந்த வேலையை செய்துள்ளார் என்று போலீஸ் கண்டுபிடித்த நிலையில், அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. தற்போது இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

மக்களே உஷார்.. தமிழக்தில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கனமழை., சென்னை வானிலை மையம் தகவல்1!

Leave a Comment