பார்டா.., எமனுக்கே அல்வா கொடுத்த 80 வயது முதியவர்.., உனக்கு ஆபீசு கெட்டிடே.., அதிசயம் ஆனால் உண்மை!!

உலக நாடுகளில் உள்ள ஆங்காங்கே இருக்கும் பகுதிகளில் வினோதமான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. அந்த வகைலி ஹரியானா மாநிலத்தில் 80 வயது முதியவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிய நிலையில் திடீரென எழுந்து உட்கார்ந்த சம்பவம் அனைவரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழத்தியுள்ளது. அதாவது ஹரியானா மாநிலத்தை சேர்ந்த 80 வயதான தர்ஷன் சிங் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்து விட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், அவரது உறவினர்கள் முதியவரை ஆம்புலன்சில் அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது அவர்கள் சென்ற பாதை குண்டுகுழியுமாக இருந்த நிலையில், ஆம்புலன்ஸ் ஒரு பக்கம் ஏறியும் ஒரு பக்கம் இறங்கியும் சென்றுள்ளது. அப்போது ஆம்புலன்ஸில் தாத்தாவுடை கை அசைந்த நிலையில், அவருடைய இதய துடிப்பை பேரன் உணர்ந்துள்ளார். அதனை தொடர்ந்து மீண்டும் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்று தாத்தாவை பரிசோதித்து பார்த்ததில் தாத்தா உயிரோடு இருக்கிறார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் தாத்தாவின் உறவினர்கள் சந்தோஷம் அடைந்தனர். இந்த செய்தியை பார்த்த நெட்டிசன்கள் எமனுக்கே டாடா காட்டிட்டு வண்டாரேப்பா., ஆயிசு கெட்டிதானோ என்று கூறி வருகின்றனர்.

Leave a Comment