பக்தர்களே.., முருகனின் அறுபடை வீடுகளுக்கு இலவசமாக போகணுமா? அப்ப முதல இத பண்ணுங்க!!!

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முருகனின் அறுபடை வீடுகளுக்கு இலவச ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்வதாக தற்போது நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அதாவது அவர் கூறியதாவது, முதல்வர் வழிகாட்டுதலின் படி முருகனின் அறுபடை வீடுகளான பழனி, திருப்பரங்குன்றம், திருத்தணி, திருச்செந்தூர், சுவாமிமலை, பழமுதிர்சோலை உள்ளிட்ட ஆறு திருத்தலங்களுக்கு கிட்டத்தட்ட 200 பேரை வருடத்திற்கு 5 முறை இலவசமாக அழைத்து செல்லப்படும் என்று கூறினார்.

இலவச ஆன்மீக சுற்றுலா

அதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இந்த இலவச ஆன்மீக சுற்றுலா  வருகிற 28ம் தேதி முதல் தொடங்குகிறது. மேலும் இந்த சுற்றுலாவுக்கு 60 வயது 60 வயதுக்கு மேல் 70 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

Leave a Comment