
தற்போதைய காலகட்டத்தில் மதுவால் பெரும்பாலான குடும்பத்தில் பல பிரச்சினைகள் ஏற்படுவதால் நடுத்தெருவுக்கு வந்துவிடும் அளவுக்கு சென்று விடுகிறது. அந்த வகையில் மது போதையில் கர்ப்பிணி மனைவிக்கு கணவன் செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திண்டுக்கல் ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த பாண்டியன்(24) என்ற இளைஞனுக்கும் வளர்மதி என்ற பெண்ணுக்கும் கடந்த 8 மாதத்திற்கு முன்பு கல்யாணம் நடந்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
தற்போது வளர்மதி 5 மாத கர்ப்பமாக இருந்து வரும் நிலையில், பாண்டியன் மனைவியை அழைத்து மாமியார் வீட்டிற்கு பேருந்தில் சென்று சென்றுள்ளனர். அப்போது மது போதையில் இருந்த பாண்டியனுக்கும், வளர்மதிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது இருவரும் பேருந்தின் படிக்கட்டுக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து வளர்மதி பேச்சில் காண்டான பாண்டியன் அந்த பெண் நிறைமாத கர்ப்பிணி என்று பாராமல் ஓங்கி வயிற்றில் மிதித்து பேருந்தில் இருந்து கீழே தள்ளியுள்ளார். ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்ததால் வளர்மதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீஸ் வழக்கு பதிவு செய்து பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. மாமனாரின் பைக்கை தர வேண்டும் என்று வாக்குவாதம் எழுந்ததாக கூறப்படுகிறது.