சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலுக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. அந்த வகையில் மதியம் 2 மணிக்கு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் இலக்கியா. இந்த தொடரில் லீடு ரோலில் ஹீமா பிந்து நடிக்க அவருடன் இணைந்து, நந்தன் லோகநாதன், ரூபஸ்ரீ, மீனாவேம்புரி, சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு இந்த தொடரில் இருந்து விலகுவதாக ஹீமா பிந்து அறிவித்திருந்தார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் எந்த காரணத்துக்காக வெளியேறினார் என்பது குறித்து தற்போது வரை எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும் இந்த சீரியலில் ஹீமா பிந்து நடித்த இலக்கியா கதாபாத்திரத்தை ஏற்று யார் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகம் காணப்பட்ட நிலையில் தற்போது முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இலக்கியா தொடரில் ஹீமா பிந்து கேரக்டரில் நடிகை சாம்பவி தான் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான ப்ரோமோ விரைவில் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.