இந்திய ஹாக்கி வீரர் மீது போக்சோ வழக்கு.., புகார் கொடுத்த கைப்பந்து வீராங்கனை – போலீஸ் விசாரணை!!
இந்திய ஹாக்கி அணியில் முக்கிய வீரராக இருந்து வந்தவர் தான் வருண் குமார். இவர் கடந்த 2020 ஆண்டு நடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று இந்திய அணியில் வீரராக இடம் பிடித்திருந்தார். இதனை தொடர்ந்து கடந்த 2022 ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் தங்கம் வென்றிருந்தார். அதுமட்டுமின்றி 2021ம் ஆண்டு விருதுகளில் முக்கியமான ஒன்றான அர்ஜூனா விருதையும் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் மீது ஒரு இளம் பெண் புகார் கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது அந்த இளம் பெண் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, வருண் குமார் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய என்னிடம் காதலிப்பதாக கூறி என்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்றும், கல்யாணம் செய்து கொள்ளாமல் கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது புகார் கொடுத்தது ஐதராபாத்தை சேர்ந்த கைப்பந்து வீராங்கனை என்பது தெரிய வந்துள்ளது.