2வது வெற்றிக்கு கங்கணம் கட்டி சுற்றும் RCB.., லக்னோ அணியுடன் பலப்பரீட்சை.., யாருக்கு வெற்றி?2வது வெற்றிக்கு கங்கணம் கட்டி சுற்றும் RCB.., லக்னோ அணியுடன் பலப்பரீட்சை.., யாருக்கு வெற்றி?

ஐபிஎல் தொடரில் தற்போது 17 வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடக்க இருக்கும் 15 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி மோதுகிறது. கடந்த சீசனில் இந்த இரண்டு அணிகளும்  இரு போட்டிகளில் எதிர்கொண்ட நிலையில் 2 அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வென்றனர். இந்நிலையில் இந்த சீசனில் இரு அணிகளும் முதல் முறையாக மோதுகின்றனர். மேலும் இந்த போட்டியில் பெங்களூர் அணி தான் வெற்றி பெற வேண்டும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக இந்த போட்டி இன்று 7 மணி அளவில் பெங்களூர் சின்னசாமி  மைதானத்தில் நடைபெற இருக்கிறது. பெங்களூரு மைதானத்தில் நடைபெறுவதால் RCB அணிக்கு வெற்றி சாதகமாக இருக்கிறது. ஆனால் கடந்த போட்டியில் பெங்களூரு மைதானத்தில் RCB தோல்வியுற்றது. அதுமட்டுமின்றி இந்த சீசனில் லக்னோ அணி கடந்த போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. இந்த பலப்பரீட்சையில் எந்த அணி வெற்றி பெற போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். 

திரையுலகில் தொடரும் மரணம்.., பிதாமகன் பட நகைச்சுவை நடிகர் திடீர் மறைவு.., சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *