
ஐபிஎல் தொடரில் வருகிற ஏப்ரல் 8ம் தேதி நடக்க இருக்கும் சிஎஸ்கே – கேகேஆர் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
சேப்பாக்கத்தில் நடைபெறும் CSK vs KKR போட்டி
நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் வெற்றி கனியை சுவைக்க வேண்டும் என்று 10 அணிகளிலும் போட்டி போட்டு விளையாடி வருகிறது. தற்போது வெளியான புள்ளியில் பட்டியலில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று KKR மற்றும் RR அடுத்தடுத்து இருக்கும் நிலையில், 3க்கு இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று CSK அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து CSK அணி நாளை SRH அணியுடனும், ஏப்ரல் 8ஆம் தேதி KKR அணியுடனும் CSK அணி மோத உள்ளது. மேலும் நாளை நடைபெற இருக்கும் போட்டி ஐதராபாத் மைதானத்தில் நடக்கிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

ஆனால் ஏப்ரல் 8ம் தேதி KKR அணியுடனும் CSK அணி மோத இருக்கும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் அதற்கான ஆன்லைன் டிக்கெட் எப்போது என்பது குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சிஎஸ்கே மற்றும் கேகேஆர் மோத இருக்கும் போட்டிக்கான என்ட்ரி டிக்கெட் நாளை 5ஆம் தேதி காலை 09.30 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட் விற்பனை தொடங்கும் என தெரிவித்துள்ளனர். இந்த போட்டியிலாவது தோனி இறங்குவாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.