இந்த போட்டோவில் இருக்கும் பன்முக திறமை கொண்ட நடிகர் யார் தெரியுமா?.., தெரிஞ்சா ஆடி போயிருவீங்க!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் மணிகண்டன். இவர் சினிமாவில் நுழைந்த கொஞ்ச காலத்தில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், ஞானவேல்ராஜா படைப்பில் நடிகர் சூர்யாவின் உன்னதமான நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ஜெய் பீம் படத்தில், அவர் நடித்த கதாபாத்திரம் தான் மணிகண்டனை உலகமெங்கும் பிரபலமடைய செய்தது.

இதனை தொடர்ந்து குட் நைட் படத்தில் தனது எதார்த்தமான நடிப்பை காட்டி அந்த படத்திலும் வெற்றி பெற்றார். தற்போது இவர் நடிப்பில் உருவான லவ்வர் திரைப்படம் இந்த மாதம் வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கு ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கின்றனர். அவர் “நரை எழுதும் சுயசரிதம்”  என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ஒரு சில படத்திற்கு வசனமும் எழுதியுள்ளார். இந்நிலையில் அவர் கல்லூரியில் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

அரசியலில் குதித்த விஜய்.., தமிழ் சினிமாவில் அடுத்த தளபதி யார்? அட.., இந்த நடிகர் தானா? Vijay அளவுக்கு தாக்குபிடிப்பிப்பாரா?

Leave a Comment