அடக்கடவுளே., உங்களுக்கா இந்த ஒரு நிலைமை.., மணிமேகலையை டீலில் விட்ட விஜய் டிவி.., கண்கலங்கிய ரசிகர்கள்!!அடக்கடவுளே., உங்களுக்கா இந்த ஒரு நிலைமை.., மணிமேகலையை டீலில் விட்ட விஜய் டிவி.., கண்கலங்கிய ரசிகர்கள்!!

விஜய் டிவியில் பிக்பாஸ்க்கு பிறகு மக்கள் மத்தியில் அதிக மவுஸ் இருக்கும் ஷோ என்றால் அது குக் வித் கோமாளி தான். கிட்டத்தட்ட நான்கு சீசன்கள் ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ஐந்தாவது சீசன் ஆரம்பிப்பதற்கான பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இந்த ஷோவில் கோமாளியாக கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் மணிமேகலை. அவர் கடைசி சீசனில் கோமாளியாக இல்லாமல் ஆங்கராக பங்கேற்றார். இதற்கிடையில் அவர் டான்ஸர் ஹுசைன் என்பவரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார்.

மேலும் அவர் தனது கணவருடன் சேர்ந்து ஒரு யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் எந்த வாய்ப்பும் தேடி வரவில்லை என்றும், வீட்டு லோன் கட்டுவதற்கு கூட பணமில்லாமல் இருந்து வருவதாக கூறி வருத்தம் அடைந்துள்ளார். விரைவில் குக் வித் கோமாளி சீசன் 5 தொடங்கினால் வாய்ப்பு கிடைக்கும் என்று ரசிகர்கள் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மேலும் உங்களுக்கு இப்படி ஒரு நிலைமையா என்று ரசிகர்கள் சற்று சோகத்தில் இருந்து வருகின்றனர். 

அரசியலில் குதித்த விஜய்.., தமிழ் சினிமாவில் அடுத்த தளபதி யார்? அட.., இந்த நடிகர் தானா? Vijay அளவுக்கு தாக்குபிடிப்பிப்பாரா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *