மறைந்த நடிகர் விவேக்கின் நிறைவேறாத கடைசி ஆசை .., 30 வருஷமா போராடி கிடைச்சது.., ஒரே நொடியில போயிருச்சு!!மறைந்த நடிகர் விவேக்கின் நிறைவேறாத கடைசி ஆசை .., 30 வருஷமா போராடி கிடைச்சது.., ஒரே நொடியில போயிருச்சு!!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில்  ஒருவராக தலை தூக்கி நின்றவர் தான் நடிகர் விவேக். கருத்துக்கள் மூலம் காமெடி செய்து பிரபலமான இவர் ரஜினி, அஜித், விஜய், பிரசாந்த், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். சில படங்களில் ஹீரோவாக நடித்தார், ஆனால் அது அவருக்கு கை கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். மீண்டும் காமெடியனாக நடித்த இவர் கடைசியாக தி லெஜண்ட் படத்தில் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து கடந்த 2021ம் ஆண்டு பரிதாபமாக உயிரிழந்தார். அவர் இறப்பதற்கு முன்னால் ஒரு ஆசையை எல்லாரிடமும் கூறுவாராம். ஆனால் அது விவேக் வாழ்க்கையில் வெறும் ஆசையாகவே போய்விட்டது. அதாவது நடிகர் விவேக் பல முன்னணி நட்சத்திரங்களுடன் சேர்ந்து நடித்த நிலையில், உலகநாயகன் கமல்ஹாசனுடன் மட்டும் நடித்தது இல்லையாம்.

அவருடன் எப்படியாவது ஒரு படத்திலாவது சேர்ந்து நடித்துடை வேண்டும் என்று பல முயற்சிகள் செய்துள்ளார். அதன்பிறகு தான் அவருக்கு சங்கர் இயக்கத்தில் தற்போது உருவாகிவரும் இந்தியன் 2 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கமலுடன் சேர்ந்து பாதி சீன்கள் விவேக் நடித்த நிலையில் தான் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். இப்படி கடைசி வரை அவருடைய ஆசை நிறைவேறாமல் போனது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

தளபதி விஜய் வழியை பின்பற்றும் ரஜினிகாந்த்., இந்த விஷயத்திலுமா? கலாய்க்கும் நெட்டிசன்கள்.., என்னனு தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *