கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா எப்போது? இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா எப்போது? இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா பிப்ரவரி  மாதம் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. கச்சத்தீவு தேவாலய திருவிழாவில் பங்கேற்க பிப்ரவரி 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயம் :

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் அமைந்துள்ளது கச்சத்தீவு. மேலும் இது தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரத்திலிருந்து  12 கிலோமீட்டர் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவு பகுதியில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த கச்சத்தீவில் அமைந்துள்ள  புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் அல்லது மார்ச் மாதம் நடைபெறுவது வழக்கம். கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா  பிப்ரவரி  மாதம் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இந்த ஆண்டு நடைபெறும் விழாவில் தமிழகத்திலிருந்து 4000 பேரும், இலங்கையிலிருந்து 4000 பேரும் மொத்தம் 8000 நபர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். அதன்படி கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய விழாவில் பங்கேற்பவர்களுக்கு இன்று முதல் விண்ணப்ப படிவத்தை வழங்கப்படும் என ராமேஸ்வரம் புனித ஜோசப் தேவாலயத்தின் பங்குத்தந்தை சந்தியாகு அறிவித்துள்ளார்.  கச்சத்தீவு தேவாலய திருவிழாவில் பங்கேற்க பிப்ரவரி 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மது பிரியர்கள் தலையில் இடியை இறக்கிய செய்தி., இனி குவாட்டர் இவ்வளவு ரூபாயா? அரசு அதிரடி அறிவிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *