சரியான ஜோடி பொருத்தம்.., இவரு தான் கங்கனா ரனாவத் பாய் ப்ரண்டா? அப்ப விரைவில் டும் டும் டும் தானா?

பாலிவுட்டில் டாப் நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகை கங்கனா ரனாவத். இவர் தமிழில் தாம் தூம் படத்தில் நடித்து அறிமுகமானார். ஆனால் அந்த படம் சரியாக ஓடாததால், மீண்டும் பாலிவுட்டை நோக்கி சென்றார். தற்போது சந்திரமுகி பார்ட் 2 வில் நடித்து மீண்டும் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். இப்படம் கலவையான விமர்சனம் பெற்றது.

இந்த தமிழ் படமும் அவர்  நினைத்ததை போல் வெற்றியை தரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இது ஒரு பக்கம் இருக்க, அரசியல் குறித்து பல கருத்துக்களை ஓப்பனாக பேசி சர்ச்சைக்கு பெயர் போனவர். சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் எனக்கு கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

அது காதல் கல்யாணமாக இருந்தாலும் சரி, பெற்றோர் செய்து வைக்கும் கல்யாணமாக இருந்தாலும் சரி என்றும் அடுத்த 5 வருடத்தில் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இவர் வெளிநாட்டில் ஒரு ஆணுடன் சேர்ந்து சுற்றும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அவர் தான் கங்கனா ரனாவத் காதலனா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். 

Leave a Comment