சும்மா சில்லு சில்லுனு வெளியான "கங்குவா" பட அப்டேட்.., படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு.., சந்தோஷத்தில் ரசிகர்கள்!!சும்மா சில்லு சில்லுனு வெளியான "கங்குவா" பட அப்டேட்.., படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு.., சந்தோஷத்தில் ரசிகர்கள்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் சூர்யா தற்போது பிசியாக நடித்து வரும் திரைப்படம் தான் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் திஷா பாட்னி, பாபி தியோல் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கங்குவா படத்தை குறித்து படக்குழு சூப்பர் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது நடிகர் சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இப்படத்தோட ரிலீஸ் தேதி குறித்து விரைவில் அப்டேட்கள் வெளியாகலாம் என கூறப்படுகிறது. இப்படம் வரலாற்று சம்பந்தப்பட்ட கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் ரசிகர்கள் தற்போது வரை மிகுந்த ஆர்வத்துடன் காத்து கொண்டிருக்கின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *