அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்தை நிராகரித்த ஆளுநர்.., கொந்தளிக்கும் கர்நாடகா அரசு!!அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்தை நிராகரித்த ஆளுநர்.., கொந்தளிக்கும் கர்நாடகா அரசு!!

 கர்நாடக அரசு நிறைவேற்றிய அவசர சட்ட மசோதவை கர்நாடகா மாநிலத்தின் ஆளுநர் திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தின் ஆளுநர்:

தற்போது கர்நாடக மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த அடிப்படையில் அம் மாநில அரசு அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த அவசர சட்டம் என்னவென்றால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கடைகள், உணவகங்கள், உள்ளிட்ட வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் 60 % கன்னட மொழியில் இருக்க வேண்டும் என அம்மாநில அரசு அவசர சட்டத்தை இயற்றியது.

இந்நிலையில் ஒப்புதலுக்கு அனுப்பிய கர்நாடக அரசின் அவசர சட்ட மசோதாவை ஆளுநர் தவர்சந்த் கெலாட்  திருப்பி அனுப்பியுள்ளார். மேலும் சட்டப்பேரவையில் மசோதாவை நிறைவேற்றி கொள்ளுமாறும் கருத்து தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தமிழ்நாடு, கேரளாவை தொடர்ந்து மற்றொரு தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவிலும் அரசிற்கும் ஆளுநருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியலில் குதிக்கும் தளபதி விஜய்.. இதுலையும் போட்டிக்கு வரும் நடிகர் அஜித் குமார்.., ட்விஸ்ட் வைத்த பிரபலம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *