வாகன ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் இன்று முதல் ஸ்டிரைக் – தேர்வு விதிமுறைகளை கடுமையாக்கிய கேரள அரசு!!
வாகன ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் இன்று முதல் ஸ்டிரைக்
வாகன ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் இன்று முதல் ஸ்டிரைக்: நாடு முழுவதும் 18 வயது பூர்த்தியானவர்கள் மட்டுமே இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இயக்குவதற்கு தகுதியானவர். எனவே அவர்களின் தகுதியை மற்றவர்களுக்கு தெரிவிக்கும் விதமாக தான் ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் டிரைவிங் ஸ்கூலில் சேர்ந்து முறையான பயிற்சி எடுத்து கொண்டு ஓட்டுநர் உரிமத்தை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் உள்ள ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது கேரள அரசு லைசென்ஸ் பெறுவதற்கான தேர்வு விதிமுறைகளை கடுமையாக்கியது. சொல்ல போனால் தேர்வுக்கு கொண்டு வரும் கார்கள் 15 ஆண்டுகளுக்கு மேல் பழைய வண்டியாக இருக்க கூடாது. மேலும் ஆட்டோமேட்டிக் கியர் கொண்ட கார்களுக்கு அனுமதி இல்லை. குறிப்பாக கார்களில் டேஷ் கேம் இருக்க வேண்டும் என்று பல விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. எனவே இதற்கு எதிர்ப்பு தரும் விதமாக தான் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் ஸ்டிரைக் செய்து வருகின்றனர். இதனால் புதிதாக சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.