அடக்கடவுளே.., ‘LOVER’ ஆல் வந்த சோகம்.., வருத்தத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.., என்ன நடந்தது?
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் மகளும் பிரபல இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தற்போது இவர் இயக்கத்தில் லால் சலாம் உருவாகியுள்ளது. இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் லீடு ரோலில் நடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் அயலான், கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாக இருந்ததால் இப்படத்தின் வெளியீட்டு தேதியை மாற்றியதாக கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதன்படி இப்படம் அடுத்த மாதம் 9ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது லால் சலாம் படத்துக்கு போட்டியாக மணிகண்டன் நடித்த LOVER திரைப்படம் வெளியாக இருக்கிறது.
தொடர்ந்து மணிகண்டன் நல்ல படங்களை கொடுத்து வருவதால் இந்த படத்துக்கும் நல்ல வரவேற்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே லால் சலாம் இயக்குனர் ஐஸ்வர்யா கொஞ்சம் திகைத்து கொண்டு தான் இருக்கிறார். இருப்பினும் சூப்பர் ஸ்டார் நடித்துள்ளதால் இந்த படத்துக்கு நல்ல கூட்டம் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.