இந்த புகைப்படத்தில் உள்ள பிக்பாஸ் பிரபலம் யாருன்னு தெரியுமா? பிக்பாஸ் காதல் ஜோடியில் ஒருவர்?இந்த புகைப்படத்தில் உள்ள பிக்பாஸ் பிரபலம் யாருன்னு தெரியுமா? பிக்பாஸ் காதல் ஜோடியில் ஒருவர்?

பெரும்பாலான மக்களின் ஃபேவரைட் ஷோவாக இருந்து வரும் பிக்பாஸ் சீசன் 7 கடந்த வாரம் தான் முடிவுக்கு வந்தது. இந்த ஏழாவது சீசன் டைட்டிலை விஜே அர்ச்சனா தட்டி சென்றார். மேலும் இந்த சீசனில் பல பரீட்சையமான முகங்கள் கலந்து கொண்டனர். அதில் நம்மில் பலருக்கும் தெரிந்த முகம் என்றால் மணி மற்றும் ரவீனா தான். அவர்கள் இந்த வீட்டிற்குள் செல்வதற்கு முன்னாடியே வெளியே ஒன்றாக டான்ஸ் ஆடி வெளிநாட்டுக்கு எல்லாம் ஒன்றாக சென்றுள்ளனர்.

அப்போது இருவருக்கும் அண்ணன் தங்கை உறவு இருந்த நிலையில், இந்த வீட்டிற்கு சென்ற பின் அது காதலாக மாறியது. இவர்கள் இரண்டு பேரும் தனியாகவே இருந்து ரகசியம் பேசி கிட்டத்தட்ட 80 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த நிலையில், ரவீனா திடீரென வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது அந்த வழியை காட்டிக்கலாமல் அவரிடம் இருந்து விலக முடிவெடுத்து ரவீனாவை அவொய்ட் செய்து வந்தார்.

தற்போது மணி ஃபர்ஸ்ட் ரன்னர் அப்பாக வெளியே வந்த நிலையில் தற்போது வரை ரவீனாவை மணி சந்திக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் ரவீனாவின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதை பார்த்த நெட்டிசன்கள் அப்பாவும் இவ்வளவு அழகா இருக்காங்களே என்று வாயடைத்து போய் உள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *