எம்.ஆர்.ராதா இருந்திருந்தால் எங்களை பாராட்டியிருப்பார் ! பாஜகவில் இணைந்தது குறித்து ராதிகா சரத்குமார் கருத்து !

எம்.ஆர்.ராதா இருந்திருந்தால் எங்களை பாராட்டியிருப்பார். மக்களவை தேர்தல் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்துக்கொண்டார். அதன் படி பாஜக கூட்டணியில் சரத்குமாருக்கு விருதுநகர் நடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டது. அந்த வகையில் விருதுநகர் தொகுதி வேட்பளராக ராதிகா சரத்குமார் அறிவிக்கப்பட்டார். விருதுநகர் தொகுதியில் ராதிகா சரத்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பகுத்தறிவுவாதியும், முற்போக்கு சிந்தனையாளருமான ராதிகா சரத்குமாரின் தந்தை எம்.ஆர்.ராதா தற்போது இருந்தால் நீங்கள் பாஜகவில் சேர்ந்தது குறித்து என்ன சொல்லியிருப்பார் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் இதற்க்கு பதிலளித்த ராதிகா சரத்குமார்,

தனது தந்தை அரசியல் குறித்து பேசியது கிடையாது. அவர் ஒரு முற்போக்கு சிந்தனையாளர் அவருடன் நான் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் போது அங்குள்ள மக்களிடம் உங்களின் வாழ்வாதாரம் இங்கு சிறப்பாக உள்ளது அதனால் நீங்கள் இங்கேயே இருந்துகொள்ளுங்கள் என்று கூறுவார்.

லோக்சபா தேர்தல்.., பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு தாவிய முக்கிய புள்ளி.., சூடுபிடிக்கும் அரசியல் களம்!!

அதன்படி மக்களின் வாழ்வாதாரம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று எம்.ஆர்.ராதா விரும்புவார். அந்த வகையில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் அரசு மத்தியில் ஆட்சி செய்வதால் நங்கள் பாஜகவில் இணைந்தது குறித்து என்னுடைய தந்தை எம்.ஆர்.ராதா தற்போது இருந்திருந்தால் பாராட்டியிருப்பார் என்று கூறினார்.

Leave a Comment