மதுரையில் சமூக அறிவியல் தேர்வுக்கான தேதி மாற்றம்?.., பின்னணியில் இருக்கும் காரணம் என்ன? அதிர்ச்சியில் மாணவர்கள்!!மதுரையில் சமூக அறிவியல் தேர்வுக்கான தேதி மாற்றம்?.., பின்னணியில் இருக்கும் காரணம் என்ன? அதிர்ச்சியில் மாணவர்கள்!!

மதுரை சித்திரை திருவிழாவையொட்டி ஏப்ரல் 23 தேதி நடக்க இருந்த சமூக அறிவியல் தேர்வு தேதியை தற்போது மாற்றப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா வருகிற ஏப்ரல் 23ம் தேதி நடைபெற இருக்கிறது. மேலும் அந்த தேதியில் 4ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புக்கான சமூக அறிவியல் தேர்வு நடக்க இருக்கும் நிலையில், தேதியை மாற்றம் செய்ய கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் 23ம் தேதி நடக்க இருந்த சமூக அறிவியல் தேர்வு அடுத்த நாள் அதாவது 24ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் கூறியிருப்பதாவது, ” தமிழகத்தில் 4ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புக்கான இறுதி தேர்வுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து ஏப்ரல் 10ம் தேதி  நடைபெற  இருந்த அறிவியல் தேர்வு ஏப்ரல் 22ம் தேதிக்கும், அதே போல் ஏப்ரல் 12ம் தேதி  நடக்க  இருந்த சமூக அறிவியல் தேர்வு 23ம் தேதி நடைபெறும் என இயக்குநர் மாற்றம் செய்தார்.

ஏப்ரல் 23ம் தேதி மதுரையில் சித்திரை திருவிழா நடைபெற இருப்பதால், தேதியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த நிலையில்,  4ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புக்கான சமூக அறிவியல் தேர்வு  ஏப்ரல் 24 தேதி நடைபெறும் என அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

டாப்ஸி ரகசியமாக வைத்திருந்த அந்த விஷயம்- வீடியோ மூலம் வெளிவந்த உண்மை.., கடும் அப்செட்டில் முக்கிய பிரபலம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *