மக்களே.. நீங்க இன்னும் மகளிர் உரிமை தொகை வாங்கலையா? அப்ப உடனே Apply பண்ணுங்க.., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

திமுக அரசு ஆட்சியை பிடித்ததில் இருந்து தேர்தல் வாக்குறுதிகளை  தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக மகளிர் உரிமை தொகை கடந்த செப்டம்பர் மாதம் முதல் தகுதியுள்ள பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். அதன்படி கிட்டத்தட்ட 1 கோடியே 6 லட்சத்திற்கும் அதிகமானோர் மகளிர் உரிமை தொகை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து மேலும் 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் மகளிர் உரிமை தொகை கேட்டு மேல்முறையீடு செய்துள்ளனர்.

மகளிர் உரிமை தொகை
மகளிர் உரிமை தொகை

இந்நிலையில் மகளிர் உரிமை தொகை கேட்டு மேல்முறையீடு செய்தவர்களுக்கு சூப்பர் நியூஸ் வெளியாகியுள்ளது. அதாவது இந்த மாதத்திற்கான மகளிர் உரிமை தொகை வரும் 10ம் தேதி அன்று வங்கியில் வரவு வைக்கப்படும் நிலையில் மேல்முறையீடு செய்தவர்களில் கிட்டத்தட்ட 2 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

Leave a Comment