என்னது.., "மாயாண்டி குடும்பத்தார்" பார்ட் 2 வர போகுதா? அதுவும் விஜய் பட இயக்குனர் எடுக்கிறாரா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!என்னது.., "மாயாண்டி குடும்பத்தார்" பார்ட் 2 வர போகுதா? அதுவும் விஜய் பட இயக்குனர் எடுக்கிறாரா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

தமிழ் சினிமாவில் குடும்ப கதைகளை வைத்து பல படங்கள் வெளி வந்திருந்தாலும், தற்போது வரை ரசிகர்களின் பேவரைட் குடும்ப படமாக இருந்து வரும் திரைப்படம் என்றால் அது ராசு மதுரவன் இயக்கி கடந்த 2009ம் ஆண்டு வெளியான “மாயாண்டி குடும்பத்தார்” தான். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ரிலீஸாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் தமிழக அரசின் இரண்டாம் பரிசையும் வென்றது.

 "மாயாண்டி குடும்பத்தார்" பார்ட் 2
“மாயாண்டி குடும்பத்தார்” பார்ட் 2

மேலும் இப்படத்தில் முன்னணி நடிகர்கள் யாரும் நடிக்கவில்லை, இதில் லீடு ரோலில் நடித்த அனைவருமே இயக்குனர் என்றால் அது மிகையாகாது. அட ஆமாங்க, மணிவண்ணன்,  சீமான், தருண் கோபி,  பொன்வண்ணன், ரவிமரியா, சிங்கம் புலி, மயில் சாமி மற்றும் கே.பி.ஜெகன் உள்ளிட்ட இயக்குநர்கள் நடித்திருந்தனர்.

 "மாயாண்டி குடும்பத்தார்" பார்ட் 2
“மாயாண்டி குடும்பத்தார்” பார்ட் 2

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இப்படத்தை இயக்கிய ராசு மதுரவன் மறைந்த நிலையில்,  “மாயாண்டி குடும்பத்தார்” பாகம் இரண்டை  கே.பி.ஜெகன் இயக்க இருக்கிறார். இவர் விஜய் நடித்த “புதிய கீதை” படத்தை இயக்கிவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்காக ரசிகர்கள் தற்போது இருந்தே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *