மறைந்த மயில்சாமி வீட்டில் நடந்த குட் நியூஸ்.., புலிக்கு பொறந்தது பூனையாகுமா? என்ன விஷயம் தெரியுமா?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களில் காமெடி நடிகராக நடித்து பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் மயில்சாமி. இவர் சினிமாவை தாண்டி மக்களுக்கு உதவும் விதமாக பல பொதுநல தொண்டுகளில் ஈடுபட்டுள்ளார். இப்படி பொது நலம் செய்து ஏராளமான மக்களின் இதயங்களில் இடம் பிடித்த மயில்சாமி கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து அவருடைய மகன் எந்தவொரு படத்திலும் தலைகாட்டாமல் இருந்து வந்த நிலையில், இப்பொழுது சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது மயில்சாமியின் மகன் அன்பு தற்போது விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் தங்க மகள் என்ற சீரியலில் லீடு ரோலில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான ப்ரோமோ விரைவில் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

Leave a Comment