மூடநம்பிக்கையின் உச்சம்.., கங்கையில் முங்கினால் கேன்சர் சரியாகும்? 5 வயது குழந்தையை கொன்ற கொடூர தாய்!

கங்கை நதியில் 5 வயது குழந்தையை தாய் கொன்ற சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாயே கொலை செய்த சம்பவம்:

தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் எல்லா வேலைகளும் அட்வான்ஸாக போய் கொண்டிருக்கும் நிலையில், மக்களிடையே இருக்கும் இந்த மூட நம்பிக்கைக்கு மட்டும் இன்னும் வெளிச்சமே வராமல் இருக்கிறது. அந்த மூட நம்பிக்கையால் தற்போது ஒரு உயிர் போனதே மிச்சம். அதாவது, டெல்லியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் உத்தரகாண்ட், ஹர் கி பெளரிக்கு சென்ற நிலையில், அங்குள்ள கங்கை நதியில் குளித்தால் மோட்சம் கிட்டும் எனவும், தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்று கூறி குளிக்க சென்றுள்ளனர்.

அந்த குடும்பத்தில் 5 வயது குழந்தைக்கு ரத்த புற்றுநோய் இருந்துள்ளது. இதனால் அந்த குழந்தையை நீரில் முங்க வைத்து எடுத்து நிலையில், இதனை அங்கிருந்த பலரும் கண்டித்த நிலையில், என் குழந்தையை பார்த்துக்க எனக்கு தெரியும் என்று கூறி அவர்களை அடிக்க கையை ஓங்கினார். இதனை தொடர்ந்து அந்த குழந்தை மயக்கமடைந்த நிலையில், உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதித்து மருத்துவர்கள், குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எவன் தடுத்தும் என் ரூட் மாறதப்பா.., மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய விஜய்.., விரைவில் கட்சி அறிவிப்பு வெளியாகுமா?

Leave a Comment