எவன் தடுத்தும் என் ரூட் மாறதப்பா.., மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய விஜய்.., விரைவில் கட்சி அறிவிப்பு வெளியாகுமா?எவன் தடுத்தும் என் ரூட் மாறதப்பா.., மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய விஜய்.., விரைவில் கட்சி அறிவிப்பு வெளியாகுமா?

சமீப காலமாக நடிகர் விஜய் திரைத்துறையில் இருந்து விலகி விரைவில் அரசியலில் அடியெடுத்து வைக்க இருப்பதாக பல செய்திகள் சோசியல் மீடியாவில் வெளியாகி வருகின்றன. ஆனால் இந்த செய்திகளுக்கு ஏற்ப விஜய்யின் நடவடிக்கை இருந்து வருகிறது. இவர் நடத்தி வரும் மக்கள் இயக்கம் சார்பாக கடந்த சில வருடங்கள் மக்களுக்கு பல வழிகளில் உதவிகளை செய்து வருகின்றனர்.

சமீபத்தில் கூட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி மக்களுக்கு தனது கையால் பொருட்களை விஜய் வழங்கினார். இதனை தொடர்ந்து மக்கள் இயக்கத்தினரை நேரில் சந்தித்து விஜய் ஆலோசனை மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் தற்போது மீண்டும் இன்று சென்னை பனையூரில் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில் விஜய், மக்களுக்கு உதவிகளை தொடர்ந்து செய்ய வேண்டும், அதில் எந்த இடையூறு ஏற்பட்டாலும் உடனே தலைமையகத்துக்கு தெரிய படுத்த வேண்டும்.

மேலும் எப்போது வேண்டுமானாலும் தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும் என்று விஜய் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதை வைத்து பார்க்கும் பொழுது மக்கள் கட்சி அரசியல் கட்சியாக விரைவில் மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கான அறிவிப்புகள் ஒரு மாதத்தில் வெளியாகும் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்

காங்கிரஸில் இருந்து மீண்டும் பாஜகாவுக்கு தாவிய ஜெகதீஷ் ஷெட்டர்.., அவரே அறிவித்த முக்கிய அறிக்கை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *