MY3 வெப்சீரிஸ்  திரை விமர்சனம்MY3 வெப்சீரிஸ்  திரை விமர்சனம்

  வர இறுதி நாட்களை கொண்டாட நாம் ஹோட்டல் அல்லது தியேட்டர் போவது வழக்கம். ஆனால் தற்போது திரைப்படங்கள் தியேட்டர்கள் மற்றும் OTT தளங்களில் வெளியாகி விடுகின்றது. அதன் வரிசையில் OTT தளமான Disney Plus Hotstar வெளியாகிய I’M Not a Robot. தென் கொரியன் சீரியலின் ரீமேக் ஆக MY3 வெப்சீரிஸ் ரோபோவாக ஹன்சிகா கலக்கல் நடிப்பு . MY3 வெப்சீரிஸ்  திரை விமர்சனம் கானலாம். 

MY3 வெப்சீரிஸ்  திரை விமர்சனம்

MY3 வெப்சீரிஸ் :

  இந்த வெப்சீரிஸ் தமிழ் , தெலுங்கு , மலையாளம் , ஹிந்தி , கன்னடம் , மராத்தி ஆகிய 15 மொழிகளில் OTT தளத்தில் வெளியாகி உள்ளது. மொத்தம் ஒன்பது எபிசோடுகளை கொண்டு ஒவ்வரு தொடரும் 25 நிமிடங்கள் வரையில் இருக்கின்றது. தற்போது ஒன்பது எபிசோடுகளையும் நாம் ஒரே நேரத்தில் காண முடியும். 

MY3 படக்குழு :

  சிவா மனசுல சக்தி திரைப்படத்தின் இயக்குநர் ரமேஷ் MY3 திரைப்படத்தினையும் தயாரித்து உள்ளார். மேலும் ட்ரெண்ட்லவுட் டிஜிட்டல் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் ராஜா ராமமூர்த்தி திரைப்படத்தினை தயாரித்து உள்ளார்.

MY3ன் ஹீரோ ஹீரோயின்:

  ஹன்சிகா திரைப்படத்தின் ஹீரோயின் ஆக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் வெற்றியாளர் முகின்ராவ் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கின்றார். இவர்களுடன் ஜனனி ஐயர் , சந்தனு பாக்கியராஜ் , தங்கதுரை , ராமர் , வி.ஜே.பார்வதி போன்ற பல திரைபிரபலங்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். 

 பரிவர்த்தனை மூவி எப்படி இருக்கு ! முழு விமர்சனம் இதோ !

கதாப்பாத்திரம் :

  1. ஹன்சிகா – ரோபோ வேடத்திலும் மற்றொன்று சாதனமான பெண் வேடத்திலும் நடித்துள்ளார்.

  2. முகின் ராவ் – பணக்கார தொழில் அதிபர் வேடத்தில் நடித்துள்ளார்.

  3. சாந்தனு – ரோபோவின் விஞ்ஞானியாக நடித்துள்ளார்.

கதை என்ன :

நோய் பாதிப்பு :

  முகின் ராவ் மிகப்பெரிய பணக்கார தொழில் அதிபராய் இருக்கின்றார். இவருக்கு ( Human Touch Allergi ) மனித தொடுதல் ஒவ்வாமை என்னும் நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கின்றார். இவரின் சிறு வயதில் தாய் தந்தையை விபத்தில் இழந்தது முதல் இந்நோயினால் பாதிக்கப்படுகின்றார். 

ரோபோ அறிமுகம் :

  இளம் வயதில் ஒரு ரோபோ பற்றி அறிந்து கொள்கின்றார். இந்த ரோபோ பெயர் MY3. அந்த ரோபோவை உருவாக்கும் விஞ்ஞானியாக சந்தனு இருக்கின்றார். சந்தனு இவரின் அத்தை மகள் ( முன்னாள் காதலி )யை நினைவில் கொண்டு ரோபோவை உருவாக்கி இருப்பார். ரோபோ டெமோ முகினுக்கு பிடித்து போக ரோபோவை வாங்கி கொள்வதாக உறுதியளிக்கின்றார்.  சந்தனு ரோபோவை முகின் ராவ்விடம் ஒப்படைக்கும் நேரத்தில் ரோபோவில் சிறு பிரச்சனை ஏற்படுகின்றது. 

எங்கள் முக நூல் பக்கத்தில் இணைந்திடுங்கள்

ரோபோவாக ஹன்சிகா :

  இதனால் இவரின் முன்னாள் காதலியிடம் உதவி கேட்டு MY3 ரோபோவாக நடிக்க முன்னாள் காதலி ( ஹன்சிகா ) செல்கின்றாள். முகின் ராவ் மற்றும் ஹன்சிகா இருவருக்கும் எந்த மாதியான உறவு தொடர்கின்றது என்பதை MY3 வெப்சீரிஸின் இறுதி கதையாக முடிகின்றது.    

வெப்சீரிஸ் எப்படி இருக்கு :

  1. ஆள் மாறாட்டம் கதையாக இருந்தாலும் இந்த தொடரில் ஒரு வித்தியாசமான கதையை கையாண்டு உள்ளனர்.

  2. ரோபோ வேடத்திற்கு ஹன்சிகா மிகவும் பொருத்தமாக நடித்துள்ளார்.

  3. முகின் ராவ் ஃபிளாஸ் பேக் மட்டும் கொஞ்சம் எமோஷனலாக இருக்கும். மற்ற அனைத்தும் சீன்களும் ரசிக்கும் படியாக அமைந்துள்ளது. 

  4. கதைக்களம் அனைத்தும் ஊட்டியில் வைத்து எடுத்து இருப்பதால் பார்ப்பதற்கு உண்மையான நிகழ்வு போல் இருக்கும். 

  5. இந்த தொடரின் இறுதி முடியும் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதமாக எடுக்கப்பட்டு இருக்கின்றது.

  6. குடும்பமாக பார்க்கும் சீரிஸ் ஆக அமைந்துள்ளது.

MY3 வெப்சீரிஸ்  திரை விமர்சனம்

வெப்சீரிஸ் பாக்கலாமா :

  1. இந்த சீரிஸில் முகின்ராவ் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் செயற்கை தனமாக இருக்கின்றது. 

  2. முகின்ராவ் ஹன்சிகா காதல் செய்யும் காட்சிகளும் எதார்த்தமாக இல்லை.

  3. ஆள்மாறாட்டம் செய்வது சீரிஸ் இடையில் புரியும் வண்ணம் இல்லை. 

  4. சிறிய கதை தான். இதனை 2 அல்லது 3 தொடர்களில் முடித்து இருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *