தென்னிந்திய தமிழ் சினிமாவில் தற்போது சென்சேஷன் இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் தளபதி விஜய் இரண்டாவது முறையாக நடித்த திரைப்படம் தான் லியோ. இப்படம் கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது. சிலருக்கு இப்படத்திற்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ் கொடுத்திருந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரி குவித்தது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் மீது வழக்கு தொடர்ந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அதாவது மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த ராஜா முருகன் என்பவர் லியோ பட இயக்குனர் மற்றும் படக்குழு மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் லியோ படத்தில் அதிக வன்முறை காட்சிகள் இடம் பெற்றுள்ளது என்றும், போதை பொருட்களை பயன்படுத்துதல் ஆயுதங்கள், கார் அதிக வேகமாக ஓட்டலாம், போலீஸ் உதவியுடன் குற்றங்களை செய்யலாம் என சமூகத்திற்கு எதிராக ஒரு லியோ படத்தை இயக்கியுள்ளார்.
லியோ பட இயக்குனர்
எனவே இயக்குனர் லோகேஷ் கனகராஜை முறையாக உளவியல் பரிசோதனை செய்யவேண்டும் என்றும் இது போன்ற படத்தை இயக்கியதற்காக இந்திய தண்டனைச் சட்டத்தின் படி இவர் மீதும் படக்குழு மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மனுதாரரின் வழக்கறிஞர் ஆஜராகாததால் வழக்கை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.