என்னடா சொல்றீங்க.., ஒரு லிட்டர் பாட்டிலில் 2,40,000 பிளாஸ்டிக் நுண்துகள்களா?.., ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்!என்னடா சொல்றீங்க.., ஒரு லிட்டர் பாட்டிலில் 2,40,000 பிளாஸ்டிக் நுண்துகள்களா?.., ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

நமது அன்றாட வாழ்வில் தண்ணீர் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். மேலும் காடுகள் அழிப்பு மற்றும் நகரமயமாக்கல், புவி வெப்பமயமாதல் காரணமாக பருவ நிலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. இதன் காரணமாக  அடிக்கடி புயல், வெள்ளம் ஏற்படுகிறது. மேலும் சில காரணங்களால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதன் விளைவாக நாம் நமது அன்றாட வாழ்வில் மற்றும் வெளியிடங்களுக்கு செல்லும் போதும், பயணங்கள் மேற்கொள்ளும் போதும் பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரை வாங்கி பயன்படுத்தும் நிலையில் இருக்கிறோம்.

இவ்வாறு நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் மூலம் இயற்கைக்கு தீமை விளைவிக்கிறது. அதுமட்டுமல்லாமல் நமது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கிறது. கொலம்பியாவின் நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸ் இதழ் வெளியிட்ட ஆய்வு பத்திரிகை ஒன்றில் நாம் பயன்படுத்தும் ஒரு லிட்டர் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலில் 2,40,000 பிளாஸ்டிக் துகள்கள் அதாவது 90% நானோ பிளாஸ்டிக் இருப்பதாக ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதை நாம் பயன்படுத்துவதால் இந்த நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் மனித செல்களுக்குள் ஊடுருவி ரத்த ஓட்டத்தில் கலப்பதால் செரிமான சிக்கல், உணவுகளில் ஊட்டச்சத்துக்களை உடல் உட்கரிப்பதில் சிக்கலில் தொடங்கி கருவில் உள்ள குழந்தைக்கு கூட பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *