விரைவில் நடக்க இருக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் – ஒர்க்அவுட் ஆகுமா..? மக்கள் முன்வைக்கும் கருத்துக்கள் என்ன?
நாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி பொது மக்கள் தங்கள் ஆலோசனைகளை தெரிவிக்கலாம். என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் படி பொதுமக்கள் மின்னஞ்சல் மூலம் தங்களின் கருத்துக்களை பதிவு செய்யலாம் என்று ஓரே நாடு ஓரே தேர்தல் குழுவின் இயக்குனர் தெரிவித்துள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மக்கள் லோக்சபாவிற்க்கும் மற்றும் மாநிலங்களில் நடைபெறும் சட்டசபை தேர்தலுக்கும் ஒரே நேரத்தில் வாக்கு செலுத்தும் முறையாகும். இந்த முறையின் மூலம் பொது மக்கள் இரண்டு வாக்கு செலுத்தவேண்டும். அதாவது லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்கள் முறையே.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது இந்தியாவிற்கு புதிதல்ல 1964 ஆம் ஆண்டு இந்த முறையில் தான் தேர்தல் நடைபெற்றது. அதன்பிறகு சில காரணங்களால் இந்த தேர்தல் முறை கைவிடப்பட்டது. பிறகு 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி பொறுப்பேற்றபிறகு, ஒரே நாடு ஒரே தேர்தல் முறை பற்றி தொடர்ந்து பரிசீலிக்கப்பட்டு வந்தது. மேலும் இந்த முறையின் மூலம் அரசுக்கு தேர்தல் நடத்தும் செலவு குறையும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
மக்களே.., 2024 பொங்கல் பரிசு டோக்கன் ரெடியா இருக்கு.., ஆனா.., அந்த ரூ 1000 பணம்? வெளியான முக்கிய தகவல்!!
இதன் அடிப்படையில் முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த தலைமையிலான ஒரே நாடு ஒரே தேர்தல் குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் இதனை பற்றி கருத்துகளை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!!
மின்னஞ்சல் முகவரி :
oneo.gov. in
sc – hic @gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் பொதுமக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம்.