முடிவுக்கு வரும் ஜீ தமிழ் பேரன்பு சீரியல்முடிவுக்கு வரும் ஜீ தமிழ் பேரன்பு சீரியல்

  முடிவுக்கு வரும் ஜீ தமிழ் பேரன்பு சீரியல். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பேரன்பு சீரியல் TRP குறைந்து வருவதன் காரணமாக சீரியலை முடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

முடிவுக்கு வரும் ஜீ தமிழ் பேரன்பு சீரியல் ! இந்த காரணத்திற்க்காகவா ! 

முடிவுக்கு வரும் ஜீ தமிழ் பேரன்பு சீரியல்

டிவி & சீரியல்கள் :

  தற்போது இருக்கும் சீரியல்களில் சன் டிவி , விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் இவைகள் தான் மக்கள் மத்தியில் முதன்மையில் இருக்கின்றது. சீரியல் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. மேலும் புதுப் புது சீரியல்களை டிவிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. 

SKSPREAD WHATSAPP JOIN NOW

  ஒரு சீரியல் முடியும் பொது தான் அடுத்த சீரியல் டிவியில் ஒளிபரப்பாகும். விஜய் டிவியில் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் முடிவு கதையில் இருக்கின்றது. இதே போல் ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் மக்கள் விரும்பும் பிரபல சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஜீ தமிழ் & பேரன்பு :

  பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பேரன்பு சீரியல் 2021 டிசம்பர் மாதம் முதல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. சீரியலில் வைஷ்ணவி , லட்சுமி , அக்ஷிதா அசோக் போன்ற பல பிரபலங்கள் நடித்து உள்ளனர். குடும்பம் மற்றும் காதல் கதையை மையமாகக் கொண்டு சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. 

  மேலும் பேரன்பு பாகம் 1 முடிந்து பாகம் 2 தற்போது ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. மாலை நேர சீரியல் என்பதால் பேரன்பு சீரியலுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக இருந்தது. முதல் சீசனில் வளர்ப்பு மகளாக சீரியலில் பயணத்தை தொடங்கிய வானதி கதாப்பாத்திரம் மக்களை பெரிதளவில் கவர்ந்தது. திருமணத்திற்கு பின் குடும்பத்தில் சமூகத்தில் வானதி சந்திக்கும் பிரச்சனை சீரியலில் அழகாக காட்டப்பட்டு இருந்தது. சீசன் 2ல் வானதி புதிய அவதாரம் எடுத்தது போன்ற வரும் கதைக்களங்களும் மக்களுக்கு அதிகளவில் பிடித்திருந்தது. 

Pandian Store 2 Update ! திரைப்பட பிரபலம் இனி சீரியலில் ! 

TRP குறைவு :

  சீரியல் முதலில் மாலை நேரத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. சீரியலில் பல குழப்பங்கள் தீர்ந்து கதை நன்றாக செல்லும் நேரத்தில் சீரியல் நேரம் மாற்றம் செய்யப்பட்டது. தற்போது சீரியல் நேரம் மாற்றப்பட்டு மதியம் 3 மணிக்கு பேரன்பு சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. சீரியல் நேரம் மாற்றப்பட்டதில் இருந்து சீரியலை பார்க்கும் நபர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. நேர மாற்றத்திற்கு பின் சீரியலின் கதை விறுவிறுப்பாக இருந்தாலும் TRPயில் குறைந்து கொண்டே வருகின்றது. முடிவுக்கு வரும் ஜீ தமிழ் பேரன்பு சீரியல்.

43வது வார TRP :

  தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படும் அனைத்து சீரியல்களுக்கு TRP தரவுகள் வாரம் வாரம் தரப்பட்டு வருகின்றது. அதன் படி ஜீ தமிழின் பிரபல முடிவுக்கு வர இருக்கின்ற பேரன்பு சீரியல் இறுதியில் இருக்கின்றது. அதாவது சீரியலில் ஒளிபரப்பு ஆகும் 15 சீரியல்களிலும் பேரன்பு 15வது இடத்தில் இருக்கின்றது. 1.08 TRP தரவுகளை பெற்று யாரும் எதிர்பார்க்காத விதமாக கடைசி இடத்தில் இருக்கின்றது. 

முடிவுக்கு வரும் பேரன்பு :

  ஜீ தமிழின் பிரபல சீரியலில் ஒன்றாக இருப்பது பேரன்பு. ஆனால் TRP குறைந்து உள்ளதால் பேரன்பு சீரியலை முடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வானதியின் ரசிகர்கள் சோகத்திலும் ஏமாற்றத்திலும் இருக்கின்றனர்.

TRP குறைவாக இருந்தால் சீரியலை முடித்து விட்டு புதிய சீரியலை ஒளிபரப்பு செய்வது வழக்கம் தான். அதன் வரிசையில் தற்போது ஜீ தமிழ் பிரபல சீரியல் பேரன்பு முடிய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *