இன்றைய முக்கிய செய்திகள் (07.11.2023)இன்றைய முக்கிய செய்திகள் (07.11.2023)

  இன்றைய முக்கிய செய்திகள் (07.11.2023). இன்று தமிழகம் , இந்தியா மற்றும் உலகத்தில் நடந்த செய்திகளின் தொகுப்பை ஒரு வரியில் காணலாம். tnpsc போன்ற தேர்வுகளுக்கு படிப்பவர்களா நீங்கள். அதற்க்கு தேவையான நடப்பு நிகழ்வுகள் அனைத்தும் நங்கள் தருகிறோம். தமிழகத்தில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் ஒரே இடத்தில உள்ளது,

இன்றைய முக்கிய செய்திகள் (07.11.2023) ! உலகக்கோப்பை போட்டியை வெல்லுமா ஆஸ்திரேலியா !

இன்றைய முக்கிய செய்திகள் (07.11.2023)

விலை நிலவரம் :

  1. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 எனவும் ரூ. 94,24 என்றும் விற்பனை ஆகி 535 நாட்களாக மாற்றம் இல்லாமல் விற்பனையாகி வருகின்றது.

  2. தங்கம் ஒரு சவரன் ரூ. 45,360 ஆக விற்பனை.

JOIN SKSPREAD WHATSAPP CHANNEL

தமிழ்நாடு :

  1. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை முதல் கட்ட விடுபட்டவர்கள் விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டாம் கட்டமாக SMS அனுப்பும் பணி தொடக்கம். இவர்களுக்கு வரும் 10ம் தேதி பணம் வங்கி கணக்கிற்கு சேரும்.

  2. தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையின் முக்கிய இடங்களில் 18,000 போலீஸ் பாதுகாப்பு.

  3. தமிழகத்தில் 86 MBBS காலிப்பணியிடங்களுக்கு கலந்தாய்வு இன்று முதல் 13ம் தேதி வரையில் நடைபெறுகின்றது. 

  4. தமிழகத்தின் பிரபல தொழிலதிபர் மணப்பாறை சாமிநாதன் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு.

  5. வரும் 13ம் தேதியில் சென்னை கோயம்பேடு சந்தையில் கடைகள் திறக்கப்படாது – கோயம்பேடு வணிகர் சங்கம் அறிவிப்பு.

  6. அ.தி.மு கட்சி சின்னம் , பெயர் , லெட்டர் பேட் மற்றும் கொடியை ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடைகலை தடை விதித்தது உயர்நிதிமன்றம்.

  7. தூத்துக்குடி மாவட்டத்தில் தருவைகுளம் பகுதிகளில் கடல் பச்சை நிறமாக மாறியிருக்கின்றது. பல மீன்கள் செத்து கரை ஒதுங்கி இருப்பதால் மீனவர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். 

  8. நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 3,300 அரசுப்பள்ளி மாணவர்களின் CLAT தேர்வு விண்ணப்பக்கட்டணம் ரூ. 4,000த்தினை அரசு அழுத்தி மாணவர்களுக்கு இலவச பயிற்சியும் அளிக்க இருக்கின்றது. மூத்தவர் அறிவிப்பு.

  9. தருமபுரி மாவட்டத்தில் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுபவர்களுக்கு இலவச வெடி பாக்ஸ் கொடுத்து போக்குவரத்து காவல் துறையினர் விழிப்புணர்வு கொடுத்தனர்.

10. தமிழகம் முழுவதும் 7,200 பட்டாசு கடைகளுக்கு தீயணைப்பு துறையினர் அனுமதி. மேலும் தீயணைப்பு பணியில் 8000 பேர்கள் தயார் நிலையில் உள்ளனர். சென்னையில் மட்டும் 900 வீரர்கள் தயார் படுத்தப்பட்டு உள்ளனர். 

தீபாவளி போனஸ் ராயல் என்ஃபீல்டு புல்லட் ! குஷியில் எஸ்டேட் ஊழியர்கள் !

இந்தியா :

  1. சத்தீஸ்கர் மற்றும் மிசோம் மாநிலத்தில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகின்றது. 

  2. கேரளா நீதிமன்ற ஊழியர்கள் 8 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு. எச்சரிக்கை விடுத்த கேரளா அரசு. 

  3. வீட்டில் இருந்தே பணி செய்து வந்த WIPRO நிறுவன பணியாளர்கள் வாரம் 3 முறை கட்டாயம் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும். EIPRO நிறுவனம் உத்தரவு.

  4.கேரளா எர்ணாகுளம் ஹோட்டலில் பிரியாணியில் சுத்தம் செய்யப்படாத கோழி தலை. எனவே அந்த கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். 

  5. உத்தரபிரதேசம் பகுதியில் மதுபோதையில் பாம்புடன் விளையாடுவதை போன்று வீடியோ எடுத்த 22 வயதான ரோஹித் பாம்பு கடித்து உயிரிழப்பு.

  6. புதுச்சேரி மாநிலத்திலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை – முதல்வர் ரங்கசாமி உத்தரவு.

  7. போலியான வீடியோ சித்தரித்து இணையத்தில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ. 

  8. இந்தியாவில் டெஸ்லா நிறுவன மின்சார கார்களுக்கு 2024 ஜனவரி மாதத்திற்குள் அனைத்து அனுமதிகளும் வழங்க மத்திய அரசு திட்டம்.

  9. கேரளாவில் ஆயுள் தண்டனை பெற்ற இரண்டு கைதிகள் சட்டம் படிக்க அனுமதி அளித்துள்ளது கேரள உயர்நீதிமன்றம்.

10.புதுச்சேரியில் கடல் நான்காவது முறையாக செந்நிறமாக மாறியுள்ளது.

Power Cut நாளை மின்தடை (08.11.2023) ! மக்களே அலர்ட் தமிழகத்தில் முக்கிய இடங்களில் பவர் கட் இருக்கு ! 

உலகம் :

  1. கொன்யா மற்றும் ஜிம்பப்வே நாட்டில் 50,000 மக்கள் பயன்படுத்தக்கூடிய 100 போர் கிணறுகளை MrBeast என்னும் யூடியூபர்.

   2. காஸா தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் வேண்டு நியூயார்க் நகர யூத மக்கள் சுதந்திரதேவி சிலை முன் போராட்டம். 

சினிமா :

  1. மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு இன்று 69வது பிறந்தநாள்.

  2. இயக்குநர் வெங்கட் பிரபுவிற்கு இன்று பிறந்தநாள். 

  3. இந்தியன் 2 பட போஸ்டரை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி இருக்கின்றது பட தயாரிப்பு நிறுவனம்.

  4. மணிரத்னம் இயக்கம் ” Thug Life ” படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி இருக்கின்றது தயாரிப்பு நிறுவனம். 

  5. ஜப்பான் படத்தின் ‘ டச்சிங் டச்சிங் ‘ பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாகின்றது.

  6. முதல்வன் திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. 

  7. இயக்குநர் சங்கரின் ‘ Game Changer ‘ படத்தின் இசை உரிமம் Saregama நிறுவனம் பெற்றுள்ளது.

  8. ‘கல்கி 2898 AD ‘ படத்தின் போஸ்டர் வெளியிட்டு பிறந்தநாள் கூறிய படக்குழு. 

  9. ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்த ” அற்புதம் ” படத்தின் இயக்குனர் அற்புதன் (52) இயற்க்கை எய்தினார்.  

கிரிக்கெட் :

  1. இன்றைய உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளனர். 

  2. ஆல்காட்டி விரல் காயத்தின் காரணமாக உலகத்தொடர் போட்டியில் இருந்து விலகுகின்றார் வங்கதேசம் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன். 

  3. இவருக்கு பதில் கேப்டனாக நஜ்முல் ஷாண்டோ செய்யப்படுவர் என்று வங்கதேசம் கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு.

  4. இன்றைய உலகக்கோப்பை போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 291 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு 292 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

வானிலை :

  1. மத்திய கிழக்கு அரபிக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு. 

  2. தமிழகத்தில் இன்று தென்காசி , கன்னியாகுமரி , திருநெல்வேலி , தேனி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

  3. கோவை , திருப்பூர் , மதுரை , விருதுநகர் , தூத்துக்குடி , திண்டுக்கல் , சிவகங்கை , தஞ்சாவூர் , திருவாரூர் , இராமநாதபுரம் , ஈரோடு , மயிலாடுதுறை , நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.

By Nivetha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *