இயக்குனர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த நபர் கைது – இது தான் காரணமா?

தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த நபரை வனத்துறையினர் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவை தேர்தல் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக பிரபல சினிமா இயக்குநர் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார். தற்போது அவர் மக்களின் வாக்குகளை சேகரிக்க தென்னம்பாக்கத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த சமயத்தில் கிளி ஜோதிடர், தன்னிடம் ஜோதிடம் பார்க்கும் படி தங்கர் பச்சானிடம் கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து கிளி எடுத்துக் கொடுத்த சீட்டில் அவரின் எதிர்காலம் நன்றாக இருக்கிறது என்று கூறியுள்ளார். அதை கேட்டு மகிழ்ச்சி அடைந்த அவர், தொடர்ந்து வழக்கம் போல் பிரச்சாரத்தில் மீண்டும் களமிறங்கினார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த நபரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். அதாவது கிளி வளர்க்க கூடாது என்று கடந்த சில நாட்களாக வனத்துறையினர் அறிவித்திருந்த நிலையில், கிளி ஜோசியம் பார்த்த நபர் மீது வனவிலங்கு பாதுகாப்பு திருத்தச் சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து 4 கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மந்திர சக்தியில் நம்பிக்கை – தோழியுடன் தற்கொலை செய்து கொண்ட தம்பதி – விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

Leave a Comment