2024 தமிழ் புத்தாண்டு ராசி பலன் - மேஷம் முதல் மீனம் வரை, கட்டம் என்ன சொல்லுது வாங்க பாக்கலாம் !2024 தமிழ் புத்தாண்டு ராசி பலன் - மேஷம் முதல் மீனம் வரை, கட்டம் என்ன சொல்லுது வாங்க பாக்கலாம் !

2024 தமிழ் புத்தாண்டு ராசி பலன். அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை குரோதி ஆண்டு பிறக்கிறது. இந்த புது ஆண்டில் நம் வாழ்கை எப்படி இருக்கும். என்ன மாற்றங்கள் வரும். நன்மைகள் என்ன. தீமைகள் என்ன. போன்ற பல சிந்தனைகள் நம்மிடம் இருக்கும். இந்த ஆண்டின் கிரக நிலைகளை வைத்து உங்களின் ராசிக்கான பலன்களை பார்க்கலாம் வாங்க.

எதிலும் கவனம் தேவை. குடும்ப சுமை அதிகரிக்கும். உறவு காரர்களிடம் கருத்துவேறுபாடு ஏற்படலாம். திறமை உள்ளவர்கள் உங்கள் அருகில் இருப்பார்கள். அனால் நீங்கள் அவர்களை பயன்படுத்த முடியாது. வேலை ஆட்களிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள். நீண்ட நாள் கனவு நிறைவேறும். தங்கள் தொழிலை வாடகை இடத்தில இருந்து சொந்த இடத்திற்கு மாற்ற வாய்ப்பு கிடைக்கும். புனித பயணம் செய்வீர்கள். குரு பெயர்ச்சிக்கு பிறகு நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

இது உங்களுக்கு இனிய காலமாக அமையும். புதிய முற்ச்சியில் வெற்றி கிடைக்கும். சரியான தருணத்தில் நண்பர்கள் உதவுவார்கள். விரைவில் திருமணம் நடக்கும். நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். வீட்டின் பொருளாதாரம் உயரும். வீடு மற்றும் இடம் மாற்றம் உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். அசையா சொத்துக்களை வாங்க வாய்ப்பு உண்டு. எதிர்காலத்திற்காக சேமிக்க தொடங்குவீர்கள். குரு பெயர்ச்சிக்கு பின் எதிபாராத மாற்றங்கள் நடக்கலாம்.

நல்ல வாய்ப்புகள் உங்கள் வீடு தேடி வரும். பொருளாதார பிரச்னை தீரும். அரசியல்வாதிகளால் பலன் அடைவீர்கள். குடுப்பதில் நடக்கும் பெரிய பிரச்சனைகள் படி படியாக குறையும். இல்லத்தில் சுப காரியங்கள் நடக்கும். பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். மறைமுக பகை அதிகரிக்கும். திட்டமிட்ட செயல்கள் சரியாக நடக்காது. உடல் நலத்தில் கவனம் தேவை. எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரும்.கணவன் மனைவி விட்டு கொடுத்து செல்லுங்கள். தெய்வ வழிபாடு செய்யுங்கள்.

கடன் வாங்குவது மற்றும் கொடுப்பதை தவிர்க்கலாம். தங்களின் ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர வேண்டாம். பகிர்ந்தால் ஊருக்கே தெரிந்துவிடும். மருத்துவ செலவு வர வாய்ப்பு உண்டு. நெருங்கிய உறவினர்களிடம் மன கசப்பு வரலாம். தங்களின் பிள்ளைகள் மேல் ஒரு கண் வைத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் எதிர்பார்த்தது நடக்கும். சிக்கல்கள் தீர்ந்து தொழிலில் வெற்றி கிடைக்கும். வீடு கட்ட வாகனம் வாங்க நல்ல நேரம் இது. வருமானம் அதிகரிக்கும். மறக்க முடியாத நல்ல சம்பவங்கள் நடைபெறும். உடன் பிறந்தவர்களுக்கு உதவுவீர்கள். நீண்டகாலமாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்க போகிறது.

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு 2024 ! ஏப்ரல் 9 ம் தேதி முதல் தொடக்கம் – நேரிலும் சென்று வாங்கலாம் !

இனிய காலமாக அமையும். திருமண தடை நீங்கும். உடன் பிறந்தவர்களிடம் இருக்கும் பகை நீங்கும். வேலையை விட்டு விட்டு சுய தொழில் தொடங்கலாம். ஒரு சில தடைகளும் வரலாம். பிள்ளைகளை கண்காணிப்பது நல்லது. உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். பணிபுரியும் இடத்தில் பிரச்சனைகள் வரலாம்.

கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். யாருக்கும் காரண்ட்டி கையெழுத்து போடாதீர்கள். ஆரோக்கியம் சீராகும். பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி அமையும். திருமணம் நடத்தி வைப்பீர்கள். தாய் வழி உறவுகளிடம் ஆதரவு கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

ஆரோக்கியத்தில் பிரச்சனை எற்படும். குடும்ப உறவுகளிடம் மன கசப்பு ஏற்படும். பொருளாதாரம் சரித்து மீண்டும் பழைய நிலைக்கு வரும். தொழில் செய்பவர்களுக்கு பணியாளர்களால் பிரச்னை வரலாம். பகை கொண்ட உறவினர்களிடம் திரும்ப சேர வேண்டாம். வியாழன் தோறும் குரு பகவானை வழிபடுங்கள்.

கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். உடன் பிறந்தவர்களிடம் சண்டை போட வேண்டாம். கடன் வாங்க நேரிடலாம். பல காரியங்கள் பாதியிலேயே நின்று விடும். பயணங்களால் அலைச்சல் மட்டுமே வரும். பணம் வர வாய்ப்பு இல்லை. தடைகள் படி படியாகத்தான் விலகும். பெண்களாக இருந்தால் அசையா சொத்து வாங்க வாய்ப்பு உண்டு.

கவனமாக இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் சறுக்கல் ஏற்படும். பிறரிடம் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம். சொத்துக்களில் ஏற்பட்ட தகராறுகள் பெரிதாக மாறும். வேலையில் பலன் கிடைக்காது. மாத சம்பளத்தில் இருப்பவர்கள் வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்ல வேண்டாம். வராகி அம்மனை தொடர்ந்து வழிபடுங்கள்.

ஆரோகிய பிரச்னை அகலும். வீட்டில் மறக்க முடியாத நல்ல சம்பவங்கள் நடைபெறும். பிறரிடம் கொடுக்கும் வேலைகள் வெற்றிகரமாக முடியும். சண்டை போட்ட உறவினர்கள் அவர்களாக உங்களிடம் வந்து பேசுவார்கள். ஏழரை சனியின் ஆதிக்கம் நடப்பதால் கொஞ்சம் உஷாராக இருந்தால் நல்லது. உங்கள் பெயரிலேயே சொத்துக்களை வாங்குவீர்கள்.

Join Whataspp Group

மேலே கொடுக்கப்பட்டது அனைத்தும் பொதுவான பலன்கள் மட்டுமே. தனிப்பட்ட நபரின் ஜாதகம் மற்றும் அவர்களுக்கு நடக்கும் திசையை பொறுத்து மாறுபடும். பஞ்சாங்கத்தின் படி இந்த ஆண்டில் நாட்டில் வறட்சியும், புரட்சியும் ஏற்படலாம். தங்கம் உட்பட அனைத்தும் விலை உயர்ந்துகொண்டே செல்லும்.

சுபம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *