அய்யோ போச்சே., பாலு கூட காய்ச்சல., அதுக்குள்ள சரிந்து தரமட்டமான மூன்று மாடி கட்டிடம்., எழுந்த அழுகை ஓலம்!!

புதுச்சேரியில் இன்னும் சில தினங்களில் பால் காய்ச்சுவதற்கு தயாராக இருந்த புதிதாக கட்டப்பட்ட மூன்று மாடி கட்டிடம் சரிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி ஆட்டுப்பட்டியில் புதிய பேருந்து நிலையத்திற்கும் காமராஜர் சாலைக்கும் இடையே உள்ள  உப்பானார் வாய்க்கால் பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணி 10 ஆண்டுகளாக முடங்கியிருந்த நிலையில் இதற்காக வாய்க்கால் அகலப்படுத்த தோண்டிய போது அருகில் இருந்த மூன்று மாடி கட்டிடம் விரிசல் ஏற்பட்டு சரிந்து விழுந்தது. மேலும் இந்த வீடு வரும் பிப்ரவரி 11-இல் கிரக பிரேவஷத்திற்க்கு தயாராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த சம்பவம் குறித்து நேரில் ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் இந்த நிகழ்வு குறித்து ஆய்வு செய்யப்படும் எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தரப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்ததன் பேரில் அங்கு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதுக்கொரு எண்டே கிடையாதா? 16வது முறையாக சிறைக்காவலுக்கு செல்லும் செந்தில் பாலாஜி – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Leave a Comment