மாணவர்களே.., இந்த தேர்வு திடீர் தள்ளிவைப்பு.., வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

அயோத்தி ராமர் கோவிலின் மகா கும்பாபிஷேகம் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. நரேந்திர மோடி முன்னிலையில் திறந்து வைக்கப்பட்ட ராமர் கோவிலில் தற்போது சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று வருகின்றனர். மேலும் இந்த கும்பாபிஷேகத்திற்கு தமிழக முதல்வர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் உள்ள எல்லா கோவில் மற்றும் ரயில் நிலையத்திலும் லைவ் ஒளிபரப்பபட்டுவருகிறது.

இதனை தொடர்ந்து இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பல மாநிலங்களில் அரை நாள் முதல் முழு நாள் வரை பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் புதுசேரி மாநிலத்தில்  இன்று அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த மாநிலத்தில் இன்று நடக்க இருந்த பல்கலைக்கழக மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு செமஸ்டர் தேர்வுகள் வருகிற 25ம் தேதிக்கு நடக்க இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. 

ஜெய் ஸ்ரீ ராம்.., ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு கலந்துகொள்ள இருக்கும் முக்கிய பிரபலங்கள் – முழு லிஸ்ட் இதோ!!

Leave a Comment