RCB அணியின் IPL பிளே ஆஃப்ஸ் போட்டிக்கான வாய்ப்புகள் ! CSK அணியுடன் Knockout மேட்ச்சாக அமையும் !

RCB அணியின் IPL பிளே ஆஃப்ஸ் போட்டிக்கான வாய்ப்புகள். தற்போது நடப்பு ஐபில் தொடரில் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது RCB அணி பிளே ஆஃப்ஸ் போட்டிக்கு தகுதி பெறுமா என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் RCB அணி டெல்லி கேப்பிடல் அணியை வீழ்த்திய நிலையில் புள்ளி பட்டியலில் 5 வது இடத்திற்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

RCB தற்போது புள்ளிப்பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது. CSK அணிக்கு எதிரான வெற்றி மற்றும் மற்ற அணிகளின் வெற்றி, தோல்வி பொறுத்து RCB அணியின் போட்டிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கக்கூடும்.

வரும் மே 18 ஆம் தேதி சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், லக்னோ அணிக்கு இரண்டு போட்டிகள் மீதமுள்ள நிலையில் இதில் லக்னோ ஒரு போட்டியில் தோல்வியடைந்ததால் கூட RCB – CSK போட்டி Knockout போட்டியாக அமையும்.

ராயல் என்ஃபீல்டு Guerrilla 450 – சும்மா ஸ்பீடு அள்ளுதே? சந்தோஷத்தில் பைக் பிரியர்கள்?

அன்று நடைபெறும் ஆட்டத்தில் rcb அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸை வெற்றி பெற வேண்டும் அல்லது 18.1 ஓவர்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட வேண்டும். அத்துடன் இது நடக்காவிட்டால் CSK அணி அடுத்த கட்டத்திற்கு முன்னேறும்.

Leave a Comment