சூரிய வம்சம் மூவிற்கு பிறகு இணையும் சூப்பர் ஹிட் ஜோடி  – அட அதுவும் “இந்தியன் 2” பட நடிகரோடய?

சரத்குமார் நடித்த சூரிய வம்சம் மூவிற்கு பிறகு இணையும் சூப்பர் ஹிட் ஜோடி: தமிழ் சினிமாவில் சுப்ரீம் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் தான் நடிகர் சரத்குமார். தற்போது இவர் குணசித்திர கதாபாத்திரத்திலும், வில்லனாகவும் அல்டிமேட்டாக நடித்து வருகிறார். இருப்பினும் அவர் கெரியரில் எத்தனையோ சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கலாம்.

ஆனால் இப்பொழுது வரை பேசப்படும் திரைப்படம் என்றால் அது சூரிய வம்சம் தான். இப்போது கூட சில டிவி சேனல்கள் தங்களது டிஆர்பியை உயர்த்துவதற்கு  விடுமுறை நாட்களில் போடுவதுண்டு. அதற்கு காரணம் டிவியில் போட்ட இப்பொழுது கூட மக்கள் ரசித்து பார்த்து வருகிறார்.

விக்ரமனின் கை வண்ணத்தில் சரத்குமார் – தேவயானியின் கியூட்டான நடிப்பில் உருவான இப்படம் அப்போதே பல கோடி வசூலை வாரி குவித்தது. இந்நிலையில் சரத்குமார் – தேவயானி என்ற சூப்பர் ஹிட் ஜோடி மீண்டும் இணைந்து படத்தில் நடிக்க போவதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: பிரபல நடிகையின் சகோதரர் அதிரடி கைது – போதைப்பொருள் கடத்தலில் சிக்கி சின்னாபின்னமான சம்பவம்!

அதாவது நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாக இருக்கும் அவரது 40 வது படத்தில் தான் சரத்குமார் – தேவயானி ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சூரிய வம்சம் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 27 வருடங்கள் கழித்து இந்த ஜோடி ஒன்று சேர இருப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.  

Sarathkumar – Devayani – Suryavamsam – siddharth 40th film

Leave a Comment