நம்பவச்சு கழுத்தை அறுத்த நீயா நானா கோபிநாத்? படிப்பை விட்டு கூலி வேலைக்கு சென்ற இளம்பெண்.., இவரா இப்படி?நம்பவச்சு கழுத்தை அறுத்த நீயா நானா கோபிநாத்? படிப்பை விட்டு கூலி வேலைக்கு சென்ற இளம்பெண்.., இவரா இப்படி? நம்பவச்சு கழுத்தை அறுத்த நீயா நானா கோபிநாத்? படிப்பை விட்டு கூலி வேலைக்கு சென்ற இளம்பெண்.., இவரா இப்படி?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று ஒரு தனி மவுசு இருக்கிறது. குறிப்பாக நீயா? நானா? ஷோ கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த ஷோவின் வெற்றிக்கு அடித்தளமாக இருப்பவர் தான் தொகுப்பாளர் கோபிநாத். இவரை பிடிக்காத ஆட்கள் இருக்க முடியாது. இப்படி மக்களிடம் நல்ல பெயர் வாங்கிய கோபி நாத் மீது ஒரு இளம் பெண் தன்னை ஏமாற்றியதாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் நானும் என் தாத்தாவும் கடந்த 2016ம் ஆண்டு நீயா? நானா? ஷோவில் கலந்து கொண்ட போது என் படிப்புக்காக தாத்தா கஷ்டப்படுவதாக கூறினார்.

நீயா? நானா? கோபிநாத்
நீயா? நானா? கோபிநாத்

அப்போது கோபி என்னுடைய படிப்பு செலவுக்கு 25 ஆயிரம் பணத்தை தருவதாக வாக்கு கொடுத்தார். அதை நம்பிய எனக்கு தற்போது ஏமாற்றமே மிச்சம். ஆரம்பத்தில் இரண்டு முறை கால் செய்து கேட்ட போது அவர் பிஸியாக இருக்கிறார் என்று கூறினார்கள். சரி உதவி செய்பவர்களை தொந்தரவு செய்ய கூடாது என்று நானும் அடுத்து கால் செய்வதை நிறுத்தி விட்டேன். ஆனால் தற்போது வரை கோபிநாத் எந்த உதவியும் செய்யவில்லை என்றும், தற்போது படிப்பை விட்டு கூலி வேலைக்கு செல்கிறேன் என்றும் வருத்தத்துடன் அந்த இளம் பெண் கூறியுள்ளார். இது சில நாட்களுக்கு முன்பு வெளியான போதிலும், கோபி அவருக்கு உதவி செய்தாரா என்று தெரியவில்லை. தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. 

நீயா? நானா? கோபிநாத்
நீயா? நானா? கோபிநாத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *