நவம்பர் 10 வரை பள்ளிகளுக்கு விடுமுறைநவம்பர் 10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

  நவம்பர் 10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை. டெல்லியில் நிலவி வரும் மோசமான காற்று மாசுபாட்டின் காரணமாக 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களை தவிர அனைத்து மாணவர்களுக்கு நவம்பர் 10ம் தேதி வரையில் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. 

நவம்பர் 10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை ! லீவு விட்டும் சந்தோசம் இல்லை  !

நவம்பர் 10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

டெல்லி & காற்று மாசுபாடு :

  தலைநகர் டெல்லியில் கடந்த சில தினங்களாகவே காற்று மாசுபாடு அதிகரித்து உள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் அறுவடை முடிந்த நெல் செடிகளை எரிப்பதன் மூலம் பரவும் புகையும் தற்போது காற்று மாசுபாட்டிற்கு காரணமாக உள்ளது. இதன் காரணமாக மக்கள் அதிகளவில் சொந்த வாகனங்களை பயன்படுத்தாமல் பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. 

JOIN SKSPREAD WHATSAPP

  மேலும் மக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. டெல்லியில் வாகனங்கள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மாசுபாடடைந்த காற்றினை சுவாசிக்கும் போது நம்முடைய சுவாச மண்டலம் பெரிதளவில் பாதிப்படையும். காற்று மாசுபாட்டினை குறைக்க வேண்டும் என்பதற்க்காக அரசும் பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு வருகின்றது. ஆனால் இன்று தொடந்து ஏழாவது நாளாக காற்று மாசுபாடு குறைந்தபாடில்லை.

பள்ளிகளுக்கு விடுமுறை :

  டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் சூழலில் டெல்லியில் இருக்கும் பலர் மூச்சுதிணறல் நோயினால் பாதிப்படைய தொடங்கி விட்டனர். இதனால் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு நவம்பர் 3ம் தேதி வரையில் விடுமுறையானது அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் காற்று மாசுபாட்டின் அளவு குறையாத காரணத்தினால் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வருகின்ற நவம்பர் 10ம் தேதி வரையில் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வர வேண்டும் என்று உத்தரவு அளிக்கப்பட்டு இருந்தது. உயர்கல்வி வகுப்புகள் வழக்கம் போல் நடந்து வந்தது.

10 , 12 தவிர அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை :

  இந்நிலையில் 1 முதல் 9 வரையிலும் மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் நவம்பர் 10ம் தேதி வரையில் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் செயல்படும் என்று அறிவித்து உள்ளது டெல்லி பள்ளிக்கல்வித்துறை. 

நாளை மின்தடை பகுதிகள் ( 06.11.2023 ) ! மாதாந்திர பராமரிப்பு நடைபெறும்  ! 

ஆன்லைன் வகுப்புகள் :

  1 முதல் 9 வரையில் மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் விடுமுறை தினங்களில் ஆன்லைன் வகுப்புகள் எடுப்பது பற்றி ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் பல அலுவலகங்களிலும் வீட்டில் இருந்து பணி புரிய கோரிக்கைகளும் எழுந்துள்ளது. 

தாஜ்மகால் எங்கே :

  உலக அதிசயங்களில் ஒன்றாக இருப்பது தாஜ்மஹால். பல சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடமாக இருக்கின்றது. காற்று மாசுபாட்டின் காரணமாக மூடு பணி தற்போது  தாஜ்மஹாலை மறைத்து உள்ளது.

தீபாவளி நெருங்கி வந்து வந்துவிட்டது. ஆனால் டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் அவசியமில்லாத கட்டுமான பணிகளும் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. டெல்லி மட்டுமல்லாது டெல்லி சுற்றி இருக்கும் பல நகரங்களும் காற்று மாசுபாட்டினால் அவதிப்பட்டு வருகின்றனர். காற்று மாசால் லீவு விட்டும் மாணவர்களுக்கு சந்தோசம் இல்லை காற்று மாசுபாட்டின் அளவு குறைந்தால் தான் டெல்லி மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பும். 

By Nivetha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *