உலகின் சக்திவாய்ந்த பணம் உள்ள நாடு எது தெரியுமா? அப்பேற்பட்ட அமெரிக்கா எத்தனையாவது இடம்?

Breaking News: உலகின் சக்திவாய்ந்த பணம் உள்ள நாடு எது தெரியுமா: நாட்டில் புழங்கி வரும் பணங்களில் உலகின் சக்தி வாய்ந்த பணம் எது என்று கேட்டால் முதலில் வாய்க்கு வருவது அமெரிக்க டாலர் தான். ஆனால் அது உண்மை கிடையாது. இப்போதைய டிஜிட்டல் உலகத்தில் எல்லாமே மாறிப் போய் கொண்டிருக்கிறது. அப்படி உலகின் சக்தி வாய்ந்த பணம் எந்த நாட்டில் இருக்கிறது என்பதை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஆனால் அதுக்கு முன்னாடி எப்படி சக்தி வாய்ந்த பணம் என்று நாம் கணக்கிட போகிறது என்பது குறித்து சும்மா தெரிந்து கொள்ளலாம்.

அதாவது ஒவ்வொரு நாட்டின் பணத்தின் மதிப்பு என்பது தேவை மற்றும் விநியோகத்தை பொறுத்து தான் மாறுபடுகிறது.

ஆனால் ஒரு சில நாணயங்கள் மட்டும்  “pegged” போன்றதன் அடிப்படையில் தான் அமைகிறது.

இன்னும், தெளிவாக சொல்ல போனால் (இந்திய ரூபாய்) மற்றொரு நாணயத்துடன் ஒரு நாட்டின் நாணயத்தை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது அந்த நாணயத்தின் மதிப்பு ஒரு சராசரி விகிதத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதே போல் வெளிநாட்டு நாணயத்தில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையை பாதிக்கின்றன. எனவே எந்த நாட்டு எவ்வளவு ரூபாய் என்பது குறித்து பட்டியல் கீழே உள்ளது.

நாடு பணம் இந்திய ரூபாய்
குவைத் 1 தினார்272.76 ரூபாய்
பஹ்ரைனி1 தினார் 222.15 ரூபாய்
ஓமானி 1 ரியால்216.94 ரூபாய்
ஜோர்டானியன் 1 தினார்117.83 ரூபாய்
பிரிட்டிஷ் 1 பவுண்ட்108.38 ரூபாய்
ஜிப்ரால்ட்டர் 1 பவுண்ட்108.38 ரூபாய்
கேமன் ஐலண்ட்1 டாலர்101.39 ரூபாய்
சுவிஸ் 1 பிரான்க்93.27 ரூபாய்
யூரோ 1 யூரோ90.99 ரூபாய்
அமெரிக்க 1 டாலர் 83.53 ரூபாய்

Leave a Comment